பல ஆயிரம் கோடி சொத்து சேர்த்துள்ள தென்னிந்திய நடிகர்கள்.. லிஸ்ட்டில் ரஜினி, விஜய்க்கு எந்த இடம் தெரியுமா.?

rajini
rajini

தென்னிந்திய சினிமா உலகில் இன்று பிரபலமான நடிகர்களாக இருக்கும் ஒரு சிலர் 100 கோடிக்கு மேல் சம்பளம் வாங்குகின்றனர் அந்த வகையில் தளபதி விஜய், ரஜினி, கமல், பிரபாஸ் போன்றவர்கள் இருக்கின்றனர் இவர்கள் 100 கோடிக்கு மேல் சம்பளம் வாங்கினாலும் முழு சொத்து மதிப்பு என்று பார்த்தால் இவர்களையே ஒரு சில நடிகர்கள் பீட் பண்ணி உள்ளனர் அப்படி தென்னிந்திய சினிமா உலகில் அதிக சொத்துக்கள் வைத்திருக்கும் 10 நடிகர்களை பற்றி தான் நாம் இன்று பார்க்க இருக்கிறோம்..

1. நாகார்ஜுனா : இவர் தற்பொழுது ஒரு படத்திற்கு 20 கோடி சம்பளம் வாங்குகிறார் விளம்பர படத்திற்கு இரண்டு கோடி சம்பளம் வாங்குகிறார் இப்படி இருந்தாலும் அவருடைய சொத்து மதிப்பு மட்டும் மூவாயிரம் கோடி என சொல்லப்படுகிறது அதற்கு காரணம் அவர் பல தொழில்கள் தொழில்களில் முதலீடு செய்துள்ளார்.

2. வெங்கடேஷ் : இவருடைய சொத்து மதிப்பு சுமார் 2200 கோடி என சொல்லப்படுகிறது. படங்களில் குறைந்த சம்பளம் வாங்கினாலும் மற்றவற்றில் நல்ல தேர்ச்சி பெற்ற ஒரு பிசினஸ் மேலாக இருப்பதால் இவருடைய சொத்து மதிப்பு அதிகரித்துக் கொண்டே இருக்கிறதாம்.

3. சிரஞ்சீவி :  தெலுங்கு சினிமாவில் மிகப்பெரிய ஜாம்பவானாக வலம் வரும் இவர் இப்பொழுதும் கூட வருடத்திற்கு ஒரு படத்தை கொடுத்து வருகிறார். இவருடைய சொத்து மதிப்பு 1650 கோடி என சொல்லப்படுகிறது.

4. ராம்சரண் : சிரஞ்சீவியின் மகனான இவர் தொடர்ந்து பிளாக்பஸ்டர் ஹிட் படங்களை கொடுத்து ஓடிக்கொண்டிருக்கிறார் படத்திற்கு குறைந்த சம்பளம் வாங்கினாலும் இவருடைய சொத்து மதிப்பு மட்டும் சுமார் 1370 கோடியே சொல்லப்படுகிறது.

5. ஜூனியர் என்டிஆர்  : இவரது அப்பா மிகப்பெரிய ஹீரோ அவரை தொடர்ந்து இவரும் திரையுலகில் தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்து வருகிறார் கடைசியாக இவர் நடித்த RRR சக்க போடு போட்டது அதனை தொடர்ந்து பல்வேறு டாப் இயக்குனர்களுடன் படம் பண்ண இருக்கிறார் இவருடைய சொத்து மதிப்பு சுமார் 450 கோடி என சொல்லப்படுகிறது.

6. விஜய்  :தமிழ் சினிமாவில் வசூல் மன்னனாக வலம் இவர் வருடத்திற்கு ஒரு ஹிட் படத்தை கொடுத்து வருகிறார் அந்த வகையில் வாரிசு படத்தை லியோ படத்தில் நடித்துள்ளார் இவருடைய சொத்து மதிப்பு சுமார் 445 கோடி என சொல்லக்கூடியது.  7. ரஜினி  : பல வருடங்களாக திரையுலகில் நடித்துவரும் தற்பொழுது ஒரு படத்திற்கு 100 கோடிக்கு மேல் சம்பளம் வாங்குகிறார். இவருடைய சொத்து மதிப்பு சுமார்  430 கோடி என சொல்லப்படுகிறது.

எட்டாவது இடத்தில் மோகன்லால், ஒன்பதாவது இடத்தில் அல்லு அர்ஜுன், 10 ஆவது இடத்தில் உலகநாயகன் கமலஹாசன் பிடித்திருக்கிறார் அவருடைய சொத்து  மதிப்பு 388 கோடி என சொல்லப்படுகிறது.