சினிமா உலகில் 40 வருடங்களுக்கு மேலாக பயணித்துக் கொண்டிருப்பவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இப்பொழுது கூட தமிழ் சினிமாவில் வருடத்திற்கு ஒரு படத்தை சிறப்பான முறையில் கொடுத்து அசத்தி வருகிறார். இதனால் ரஜினியின் மார்க்கெட் இன்னும் குறைந்தபாடு இல்லை.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இப்பொழுது கூட இயக்குனர் நெல்சன்னுடன் முதல் முறையாக கூட்டணி அமைத்து தனது 169 திரைப்படமான ஜெயிலர் படத்தில் நடிக்க இருக்கிறார் இந்த படத்தின் ஷூட்டிங் வெகு விரைவில் தொடங்கப்பட இருக்கிறது. இந்த படத்தில் ரஜினி உடன் கைகோர்த்து தமன்னா, ரம்யா கிருஷ்ணன், பிரியங்கா அருள் மோகன், கன்னட நடிகர் சிவராஜ் குமார் மற்றும் பல முன்னணி நடிகர், நடிகைகள்..
இந்த படத்தில் நடிக்க இருக்கின்றனர் இந்த படம் நிச்சயம் ரஜினிக்கு ஒரு சூப்பர் ஹிட் படமாக அமையும் என பலரும் கூறி வருகின்றனர் இப்படி இருக்கின்ற நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் திரை உலகில் காலடி எடுத்து வைத்தென 47 வருடங்கள் ஆகிவிட்டன. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் முதலில் கே பாலச்சந்தர் இயக்கிய அபூர்வ ராகங்கள் என்ற திரைப்படத்தை நடித்து அறிமுகமானர்.
அதிலிருந்து இப்பொழுது வரை பல்வேறு வெற்றி படங்களை நடித்து தனக்கான ஒரு இடத்தை பிடித்து ஓடிக் கொண்டிருக்கிறார் இப்படி இருக்கின்ற நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் மற்றும் சௌந்தர்யா ரஜினிகாந்த் இருவரும் தந்தைக்கு கேக் கூட்டி வாழ்த்து தெரிவித்தனர். மேலும் தனது மனைவியுடன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் 47வது திரை உலக பயணத்தை முன்னிட்டு கேக் வெட்டி கொண்டாடினார்.
அப்பொழுது எடுக்கப்பட்ட புகைப்படம் இணையதள பக்கத்தில் வைரலாகி வருகிறது. ரஜினி மற்றும் தனது அம்மாவுடன் இருக்கும் புகைப்படத்தை சௌந்தர்யா ரஜினிகாந்த் பகிர்ந்து எங்கள் லவ்லி ஜில்லும்மா அப்பாவின் மிகப்பெரிய ரசிகை மற்றும் எங்கள் வீட்டு சூப்பர்ஸ்டார் லதா ரஜினிகாந்த் என குறிப்பிட்டுள்ளார்.