தவசி படத்தில் நடிக்க மறுத்த சௌந்தர்யா.? ஷூட்டிங் ஸ்பாட்டில் தான் யார் என்பதை உணர்த்திய விஜயகாந்த்.. வெளிவந்த சுவாரஸ்யமான தகவல்

vijayakanth
vijayakanth

80,90 காலகட்டங்களில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக ஓடியவர் கேப்டன் விஜயகாந்த் அப்பொழுது ரஜினி, கமல் போன்ற நடிகர்கள் இருந்தாலும் அவர்களுக்கு நிகராக அதிக ஹிட் படங்களை கொடுத்து அசத்தினார். இப்படிப்பட்ட விஜயகாந்த் ஒரு கட்டத்தில் தமிழ் சினிமாவில் இருந்து விலகி அரசியல் பிரவேசம் கண்டார்.

தொடர்ந்து அரசியல் வெற்றி நாயகனாக ஓடிய விஜயகாந்த் தற்போது உடல் நலக்குறைவு காரணமாக ஓய்வு எடுத்து வருகிறார். வெகு விரைவில் மீண்டும் எழுந்து அரசியல் மற்றும் சினிமாவில் நல்லபடியாக வர வேண்டும் என பலரும் வேண்டி வருகின்றனர் விஜயகாந்த் தனது சினிமா கேரியரில் எத்தனையோ ஹிட் படங்களை கொடுத்திருக்கிறார்.

அதில் மிகப்பெரிய வெற்றி படம் என்றால் தவசி தான் இந்த படத்தில் விஜயகாந்த் உடன் இணைந்து சௌந்தர்யா, வடிவேலு, நாசர், ஜெயசுதா, ஸ்ரீமன், பொன்னம்பலம், நிழல்கள் ரவி, வடிவுக்கரசி, டெல்லி கணேசன் மற்றும் பல முன்னணி நடிகர், நடிகைகள் நடித்திருந்தனர் இந்த படம் வெளிவந்து வெற்றி பெற்றதோடு மட்டுமல்லாமல் அதிக நாட்கள் ஓடி வசதியது.

இந்த திரைப்படத்தில் விஜயகாந்த் ஜோடியாக சௌந்தர்யா நடித்து இருந்தார் ஆனால் முதலில் இந்த படத்தில் சௌந்தர்யா நடிக்க மறுத்தார் காரணம் விஜயகாந்த் ரொம்ப கோபக்காரர், கோபம் வந்தால் அடித்து விடுவார் என சில பேர் சொன்னதால் சௌந்தர்யா பயந்துவிட்டார் இதை தெரிந்து கொண்ட விஜயகாந்த் சௌந்தர்யாவை சூட்டிங் ஸ்பாட்டிற்கு அழைத்தார்.

மூன்று நாள் அவருக்கு காட்சிகள் எதுவும் இல்லை வந்து உட்கார்ந்து கொண்டுதான் இருப்பார் அப்பொழுது விஜயகாந்தின் நடவடிக்கையை பார்த்து அவர் பூரித்து போனாராம் பிறகு விஜயகாந்திடம் நான் ஆரம்பத்தில் உங்களைப் பற்றி தப்பாக நினைத்து விட்டேன் மன்னித்து விடுங்கள் எனக்கூறி பிறகு தான் தவசி படத்தில் நடித்தார் என கூறப்படுகிறது இந்த தகவல் தற்போது இணையதள பக்கத்தில் வைரலாகி வருகிறது.