கொரோனா வைரஸால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கபட்டுள்ளது. அதனால் பல பிரபலங்களும் சமூக வலைத்தளத்தில் ஆடல், பாடல், சமையல் செய்வது, படம் வரைவது போன்ற வீடியோக்களை பதிவிட்டு வருகின்றனர். அதுபோல நகைச்சுவை நடிகர் சூரியும் தினமும் ஏதேனும் வீடியோ வெளியுடுவதை வழக்கமாக கொண்டுள்ளார்.
சூரி தமிழ் திரைப்பட முன்னணி நகைச்சுவை நடிகர் ஆவார். இவர் 2009 ஆம் ஆண்டு வெளிவந்த வெண்ணிலா கபடி குழு திரைப்படத்தின் மூலம் பிரபலமானார். இவர் நான் மகான் அல்ல, வருத்த படாத வாலிபர் சங்கம், களவானி, குள்ளநரிக்கூட்டம், அழகர்சாமியின் குதிரை, வேலாயுதம், ஜில்லா, பிரம்மன், ரஜினி முருகன் போன்ற பல படங்களில் நடித்துள்ளார். இதன்மூலம் தன் சிறந்த நடிப்பை வெளிக்காட்டி முன்னணி நகைச்சுவை நடிகர்களில் ஒருவரானார்.
பரோட்டா சூரி தனது குடும்பத்துடன் இணைந்து ஏதேனும் விழிப்புணர்வு வீடியோவை எடுத்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு வருவது வழக்கமாக கொண்டிருந்தார். அந்த வகையில் இன்று மருத்துவர், போலீஸ் மற்றும் தன் குழந்தைகளின் பேச்சை கேட்காமல் வெளியே போனதால் கொரோனாவால் பாதிக்கப்பட்டது போல் வீடியோவை வெளியிட்டுள்ளார்.இந்த வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
இதோ அந்த வீடியோ.
Corona day-14#covid19 #corona #socialdistancing#indiafightscorona #stayathome pic.twitter.com/bZK49jE341
— Actor Soori (@sooriofficial) April 7, 2020