தந்தையின் புகைப்படத்தை வெளியிட்டு உருக்கமான பதிவை போட்ட சூரி – கண்கலங்கிய ரசிகர்கள்.

SOORI
SOORI

தமிழ் சினிமா உலகில் காமெடியனாக உள்ளே நுழைய பல தடைகளை சந்தித்து மிகப்பெரிய அளவில் போராடி உள்ளே நுழைந்தவர் நடிகர் சூரி அந்த வலியும், வேதனையும் நன்கு அறிந்து வைத்திருந்ததால் கிடைக்கின்ற வைப்பு விடக்கூடாது என்பதற்காக படத்தின் ஒவ்வொரு சீனையும் மிக நேர்த்தியாகவும் ரசிக்கும்படி நடித்ததால் நடிகர் சூரியின்..

சினிமா பயணம் இன்று வரையிலும் அசுர வளர்ச்சியை நோக்கி ஓடிக் கொண்டிருக்கிறார். இப்போ டாப் நடிகர்களான அஜித், விஜய், சூர்யா போன்ற டாப் ஹீரோக்களின் படங்களில் காமெடியனாக நடித்து தனது மார்க்கெட்டை மிகப் பெரிய அளவில் உயர்த்திக் கொண்டு..தமிழ் சினிமாவில் தற்போது நடிகர் சூரி ஒரு முன்னணி காமெடி நட்சத்திரமாக வலம் வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படி இருக்கின்ற நிலையில் இயக்குனர் வெற்றிமாறன் நடிகர் சூரியை ஹீரோவாக்கி உள்ளார். வெற்றிமாறன் ஒரு நாவலை மையமாக வைத்து விடுதலை என்னும்  படத்தை எடுத்துள்ளார். இந்த படத்தில் ஹீரோவாக சூரி நடிக்கிறார். முக்கிய கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி போன்றோரும் நடிக்கின்றனர் இந்த திரைப்படம்.

வெகு விரைவிலேயே வெளியாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன இந்தத் திரைப்படத்திற்காக தன்னை முற்றிலுமாக மாற்றி கொண்டு புதிய அவதாரம் எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அதோடுமட்டுமல்லாமல் பல்வேறு டாப் நடிகர்கள் படங்களில் நடிக்க இப்பொழுதும் கமிட்டாகி  வருகிறார்.

அண்மையில் கூட சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் திரைப் படத்தில் காமெடியனாக நடித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி இருக்கின்ற நிலையில் தனது அப்பாவின் புகைப்படத்தை வெளியிட்டு ஒரு புதிய பதிவை போட்டுள்ளார் அதில் அவர் கூற வருவது : விழுதுகள் ஆலமரத்தை இழந்த நாள் இன்று. மீசை வைத்த சிங்கம் எங்கள் அப்பாவின் காலடி தடத்தில் நடந்தபடி நாங்கள்.. அப்பாவின் ஐந்தாம் ஆண்டு  நினைவஞ்சலி என குறிப்பிட்டுள்ளார்.