நடிகர் சூரி தமிழ் சினிமாவில் முதலில் குணசித்திர கதாபாத்திரங்களில் நடித்து இருந்தாலும் ஒரு கட்டத்தில் தனது காமெடியின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலம் அடைந்தார். தொடர்ந்து பட வாய்ப்பை அள்ளி தனக்கென ஒரு நிரந்தர இடத்தை பிடித்தார் இப்பொழுது நடிகர் சூரி. சூர்யா, அஜித், விஜய், சிவகார்த்திகேயன், ரஜினி போன்ற டாப் ஹீரோக்களின் படங்களுக்கு மட்டுமே காமெடியனாகவும், முக்கிய கதாபாத்திரங்களிலும் நடித்து ஓடிக்கொண்டிருக்கிறார் இதற்கிடையில் காமெடி நடிகர் சூரியை
ஹீரோவாக மாற்றி உள்ளார் வெற்றிமாறன். இவர் தற்பொழுது போலிஸ் சம்பந்தப்பட்ட ஒரு படத்தை எடுத்து வருகிறார் இந்த படத்தில் ஹீரோவாக சூரி நடிக்கிறார் முக்கிய கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடிக்கிறார் ஹீரோயினாக ஜீவி பிரகாஷின் தங்கை நடிக்கிறார் என தகவல் வெளியாகி உள்ளது இந்த படத்தின் சூட்டிங் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது.
சினிமாவில் எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அதற்கு ஏற்றவாறு தனது திறமையையும் உடலையும் மாற்றிக் கொண்டு நடிக்கும் நடிகர்களில் ஒருவர் சூரி. ஏனென்றால் நடிகர் சூரி சீமராஜா திரைப்படத்தில் ஒரு சின்ன ரோல் நடிக்க சிக்ஸ்பேக் வைத்து அசத்தியிருப்பார்.
ஏற்கனவே சூரிக்கு கொஞ்ச உடம்புத் தான் இருக்கும் அதிலும் சிக்ஸ்பேக் வைத்து அசத்தியது பலரையும் ஆச்சரியப்பட வைத்தது. பல பிரபலங்கள் அவரது உடம்பை பார்த்து நேரிலும், போனிலும் வாழ்த்தினார் அப்படித்தான் நடிகர் அஜித்தும் அவரது சிக்ஸ்பேக் உடம்பை பார்த்து மிரண்டு போய் ஒரு தடவை போன் பேசியுள்ளார்.
ஒரு நாள் திடீரென சிறுத்தை சிவாவிடம் இருந்து சூரி தொலைபேசியில் அழைப்பு வந்துள்ளது அப்போது பேசிய சிறுத்தை சிவா உங்களிடம் அஜித் சார் பேசவேண்டும் என சொல்லியிருக்கிறார் அதை தொடர்ந்து பேசிய அஜீத் வாழ்த்துக்கள் சூரி உங்கள் சிக்ஸ்பேக் உடம்பை பார்த்து மெய்சிலிர்த்து விட்டு எப்படி இப்படி வச்சிருக்கீங்க.. ஒரு கிராமத்திலிருந்து இவ்வளவு தூரம் வந்து இவ்வளவு நாள் சினிமாவுக்கு மெனக்கெட்டு ஒரு சின்ன சீனுக்காக சிக்ஸ்பேக் வைத்து இருக்கீங்க.. வாழ்த்துக்கள் சூரி என பாராட்டித் தள்ளினாராம் அஜித்.