இயக்குனர் வெற்றிமாறன் தனுஷுடன் தொடர்ந்து இணைந்து இவர் எடுத்த திரைப்படங்கள் அனைத்தும் சூப்பர் ஹிட் படங்களாக மாறின ஒருகட்டத்தில் அந்த படங்களின் மூலம் இவருக்கு தேசிய விருதும் கிடைத்தது. பிறகு இவர் ரசிகர்கள் கொண்டாடும் இயக்குனராக அவதாரம் எடுத்தார் தொடர்ந்து டாப் நடிகர்களை வைத்து படங்களை இயக்குவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் காமெடி நடிகர் சூரியை வைத்து விடுதலை என்னும் திரைப்படத்தை உருவாக்கினார்.
இந்த படத்திற்காக நடிகர் சூரியும் உடல் எடையை பிட்டாக வைத்துக் கொள்வது மற்றும் தாடி மீசையெல்லாம் வளர்த்து வைத்திருந்தார் இந்த படத்திற்காக கடினமாக உழைத்து வந்ததால் மற்ற படங்களில் நடிக்கும் வாய்ப்பை இழந்தார் இந்த படம் சீக்கிரமே முடிந்து விடும் என நினைத்தார் ஆனால் படம் தொடர்ந்து இழுத்துக் கொண்டே போனதால்..
இரண்டு வருடம் ஆகியும் படம் முடிந்த பாடு இல்லாமல் இருக்கிறதாம் இதனால் வந்த வாய்ப்பு வேற போய்விட்டது என புலம்பினார் எது எப்படியோ இந்த படம் தனக்கு மிகப்பெரிய ஒரு மாற்றத்தை கொடுக்கும் என நம்பி நடித்துக் கொண்டிருக்கிறார் இந்த படத்தில் அவருடன் இணைந்து விஜய் சேதுபதியும் ஒரு கௌரவ தோற்றத்தில் வந்து போவார் என கூறப்படுகிறது.
விடுதலை படத்தின் முதல் பாகத்தை இன்னும் எடுத்து முடிக்காத நிலையில் விடுதலை படத்தை இரண்டு பாகமாக எடுக்க இருப்பதாக வெற்றிமாறன் அண்மையில் தெரிவித்துள்ளார். விடுதலை திரைப்படம் ஒரு வழியாக இறுதி கட்டத்தை நெருங்கி ஓடி கொண்டு இருப்பதாக கூறப்படுகிறது.
யார் தற்பொழுது சந்தோஷமாக இருக்கிறார்களோ இல்லையோ சூரி சந்தோஷமாக இருக்கிறாராம் ஏனென்றால் இரண்டு வருடங்களாய் வந்த வாய்ப்பை இழந்துவிட்டோம் என நினைத்து புலம்பி வந்த நிலையில் தற்போது முடிவடைந்துள்ளது சூரிக்கு ரொம்ப சந்தோஷத்தை கொடுத்தது மேலும் தற்போது தனது கெட்டப்பை எல்லாம் மாற்றி சூரி அடுத்தடுத்தபட வாய்ப்பை கைப்பற்றி நடிக்க ரெடியாக திட்டம் போட்டு உள்ளதாக கூறப்படுகிறது.