தமிழ் சினிமாவில் டாப் ஹீரோக்களின் படங்களில் குணச்சித்திர ரோலில் நடித்து வந்த சூரிய ஒருகட்டத்தில் தனது ஆதாரமான காமெடியை வெளிப்படுத்தி மக்களை வெகுவாக கவர்ந்தார் சிறப்பான படங்களை கொடுத்து வந்த சூரிக்கு தற்பொழுது மென்மேலும் பட வாய்ப்புகள் கிடைக்கின்றன.
அதுமட்டுமல்லாமல் தற்போது முக்கிய கதாபாத்திரங்களிலும் ஹீரோவாகவும் நடிக்க தனது பயணத்தை தொடர்ந்து உள்ளார் அந்தவகையில் வெற்றிமாறனுடன் இணைந்து விடுதலை என்ற திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் பின்னி பெடல் எடுக்க ரெடியாக இருக்கிறார்.
இது அவருக்கு வெற்றியை தந்து விட்டால் தமிழ் சினிமாவில் ஹீரோவாக மாறி அதிக வாய்ப்புகள் இருப்பதாக கோலிவுட் வாசிகள் கூறுகின்றனர். சூரி காமெடியா நடிக்கின்ற படங்களையே மக்கள் மத்தியில் நல்ல எதிர்பார்ப்பு இருக்கின்ற நிலையில் இவ்வாறு ஹீரோவாக இறங்கியே நடிப்பதால் தாறுமாறான எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.
இப்படி இருக்கின்ற நிலையில் தற்போது நிலவும் கொரோனா சூழலை சரியில்லாததால் ஆங்காங்கே மக்கள் விழிப்புணர்வோடு இருப்பது மட்டுமல்லாமல் இதிலிருந்து தன்னை பாதுகாப்பு கொள்ள தடுப்பூசி போன்றவற்றை மருத்துவர்களிடம் சென்று போட்டுக் கொள்கின்றனர்.
அந்த வகையில் நடிகர் சூரி தனது மனைவியுடன் அரசுப்பள்ளியில் தடுப்பூசி போட்டுக்கொண்டார் மேலும் பேசிய சூரி மக்களை காக்க தடுப்பூசி போட வேண்டியது அவசியம் அதை நாம் பின்பற்றுவோம் அப்புறம் தான் இதிலிருந்து நாம் வெளிவர முடியும் என சூரி கூறினார்.