“ஹோட்டல்” என்ற பெயரில் ஏழைகளின் காசை பிடுங்கும் சூரி -கொடுக்கப்பட்ட புகார்.!

soori-
soori-

தமிழ் சினிமாவில் காமெடியனாக அறிமுகமாகி தற்பொழுது ஹீரோ அவதாரம் எடுத்துள்ளவர் நடிகர் சூரி. இவர் சினிமாவில் அஜித், விஜய், சூர்யா போன்ற நடிகர்கள் படங்களில் காமெடியானாக நடித்து தன்னை மிகப் பெரிய அளவில் உயர்த்திக்கொண்டார் பின் படிப்படியாக தனது திறமையை வளர்த்துக் கொண்டு தற்போது கெட்டப்பை மாற்றி ஹீரோவாக நடித்து வருகிறார்.

தேசிய விருது பெற்ற இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் விடுதலை இந்த படம் முழுக்க முழுக்க காடு மற்றும் மலைகள் சார்ந்த இடங்களில் படம் ஆக்கப்பட்டு வருகிறது மலைவாழ் மக்கள் போலீசாரிடம் எப்படி துன்பப்படுகிறார்கள் என்பதை இந்த படம் எடுத்துரைக்கும் எனக் கூறப்படுகிறது சூரி இந்த படத்தில் ஹீரோவாக நடிக்கிறார் மேலும் விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருவதாக  கூறப்படுகிறது.

படங்களில் இப்படி நடந்து கொண்டிருக்கும் சூரி மறுபக்கம் மதுரை சுற்றி பல இடங்களில் அம்மா உணவகம், அம்மா காபி, அம்மா டிபன் சென்டர் என பல கிளைகளை  வைத்து சம்பாதித்து வருகிறார். இந்த நிலையில் மதுரை ராஜாஜி மருத்துவமனையில் உள்ள சாப்பாட்டு கேன்டீன் டெண்டர் ஒன்றை எடுத்துள்ளார் நடிகர் சூரி இந்த டெண்டர் எடுத்த பொழுது பெரும் சர்ச்சை வெடித்தது. சூரி தனது செல்வாக்கை பயன்படுத்தி இதை ஈசியாக பெற்றுக் கொண்டார் எனவும் சொல்லப்படுகிறது.

குறைந்த விலையில் இங்கு வரும் ஏழைகளுக்கு உணவு வழங்கி சேவை செய்ய இந்த உணவகம் திறக்கப்பட்டதாக சூரி தரப்பில் தெரிவித்துள்ளது ஆனால் மதுரை அரசு மருத்துவமனை பக்கத்தில் சூரிக்கு சொந்தமான அம்மன் உணவகம் குறைந்த விலையில் உணவு தருவதாக கூறிக்கொண்டு மிகச் சிறிய அளவு இட்லி, வடை அதிக விலைக்கு விற்கப்படுகிறது இதுபோன்று டீ காபி சாப்பாடு என அனைத்தும் குறைவாக கொடுத்து  ஏழை வயிற்றில் அடித்து சம்பாதித்து வருகிறார் சூரி.

தனியார் மருத்துவமனைக்கு செல்ல முடியாதவர்கள் பணமில்லாதவர்கள் தான் அரசு மருத்துவமனைக்கு வருகிறார்கள் அங்கு சூரி அதிக விலைக்கு சாப்பாடு உணவுகளை விற்பதை பொறுத்துக் கொள்ள முடியாமல் மாவட்ட ஆட்சியருக்கு புகார் கொடுத்து உள்ளனர். ராஜாஜி மருத்துவமனையில் நடிகர் சூரிக்கு சொந்தமான அம்மன் சேவை பிரிவு என்ற உணவகத்தை தமிழக நிதி அமைச்சர் பி டி ஆர் பழனிவேல் தியாகராஜன் அவர்கள் திறந்து வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.