5 விருதுகளை தட்டிசென்ற சூரரை போற்று.! என்னென்ன விருது தெரியுமா.?

soorarai-pottru
soorarai-pottru

சோழரைப் போற்று- சிறந்த திரைப்படம்:- பெண் இயக்குனரான சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியாகிய மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்ற திரைப்படம் தான் சூரரை போற்று. இந்த திரைப்படத்திற்கு சிறந்த திரைப்பட தேசிய விருதை வழங்கியுள்ளனர்.

சூர்யா- சிறந்த நடிகர்:- தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் தான் நடிகர் சூர்யா இவர் தமிழில் பல திரைப்படங்களில் நடித்த தனக்கென ஒரு மிகப்பெரிய ரசிகர்கள் பட்டணத்தை உருவாக்கி உள்ளார் என்பதன் சொல்ல வேண்டும். மேலும் இவர் நடிப்பில் வெளியான சோழரை போற்றும் திரைப்படத்திற்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருதையும் பெற்றுள்ளார்.

அபர்ணா பாலமுரளி- சிறந்த நடிகை:- தமிழ் சினிமாவில் 8 தோட்டாக்கள் என்ற திரைப்படத்தின் மூலம்  அறிமுகமானவர்தான் நடிகை அபர்ணா. அதன் பிறகு ஒரு சில திரைப்படங்கள் நடித்து சினிமாவில் தற்போது நல்ல இடத்தில் உள்ளார் என்பதும் சொல்ல வேண்டும். இவர் நடித்த கடைசியாக வெளியான வீட்ல விசேஷம் திரைப்படமும் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் அபர்ணா சுரரைப் போன்ற திரைப்படத்திற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருதையும் பெற்றார்.

சுதா கொங்கரா – சிறந்த திரைக்கதை எழுத்தாளர்:- இயக்குனர் சுதா அவர்கள் துரோகி என்ற திரைப்படத்தை இயக்கிய அதன் மூலம் சினிமாவிற்கு அறிமுகமானார். அதன் பிறகு நடிகர் சூர்யாவை வைத்து சூரரை போற்று திரைப்படத்தை இயக்கிய அதன் மூலம் சிறந்த தலைக்கறி எழுத்தாளர் என்ற தேசிய விருதை பெற்றார்.

ஜிவி பிரகாஷ் – சிறந்த பின்னணி இசை :-சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமான ஜிவி பிரகாஷ் அதன் பிறகு பாடகர், பாடலாசிரியர், நடிகர் என பன்முக திறமைகளை கொண்டு வலம் வந்து கொண்டிருக்கிறார். இவர் டார்லிங் என்ற திரைப்படத்தில் மூலம் நடிகராக  அறிமுகமானார். மேலும் இவர் சூரரைப் போற்று திரைப்படத்திற்காக சிறந்த பின்னணி இசை என்ற விருதை பெற்றுள்ளார்.