நடிகர் சூர்யா தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் இவர் சமீப காலமாக தொடர்ந்து எதிர்பார்த்த வெற்றி திரைப்படத்தை கொடுக்க முடியாமல் தவித்து வருகிறார், இந்த நிலையில் தற்போது சுதா கொங்கரா இயக்கத்தில் சூரரை போற்று திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார்.
இந்த திரைப்படம் ராணுவ தளபதி ஏர் டெக்கான் கோபிநாத் அவர்களின் வாழ்க்கையை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ளது, இந்த திரைப்படத்தில் சூர்யா கதாநாயகனாகவும் அபர்ணா பாலமுரளி கதாநாயகியாகவும் நடித்துள்ளார்கள் அதுமட்டுமில்லாமல் படத்திற்கு இசையமைப்பாளராக ஜிவி பிரகாஷ் ஒளிப்பதிவில் நீக்கித் பொம்மி ரெட்டி அவர்கள் பணியாற்றி உள்ளார்கள்.
இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் படத்தின் தேதி எப்பொழுது வெளியிடப்படும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறார்கள் ஆனால் கரோனா ஊரடங்கு அமுலில் இருப்பதால் திரையரங்குகள் எதுவும் திறக்கப்படாமல் இருக்கிறது அதனால் இந்த திரைப்படத்தின் ரிலீஸ் தள்ளிப் போய் கொண்டே போகிறது.
இந்த நிலையில் மாலை நாலு மணிக்கு படக்குழு ஒரு புதிய போஸ்டரை வெளியிட்டுள்ளது, அந்த போஸ்டரில் சூர்யா மற்றும் அபர்ணா ரொமான்ஸ் லுக்கில் இருக்கிறார்கள் இந்த புகைப்படம் ரசிகர்களிடம் வைரலாகி வருகிறது.