ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த சூரரை போற்று டிரைலர் ரிலீஸ் தேதி அதிகாரபூர்வ அறிவிப்பு.!

suriya
suriya

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் சூர்யா நீண்டகலமாக ஹிட் திரைப்படத்தை கொடுக்க முடியாமல் தவித்து வருகிறார். இந்த நிலையில் தற்போது சுதா கொங்கரா இயக்கத்தில் சூரரை போற்று திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார்.

இந்த திரைப்படம் இந்தியாவின் முதல் பட்ஜெட் விமானத்தை உருவாக்கிய ஜிஆர் கோபிநாத்தின் வாழ்க்கை வரலாறை மையமாக வைத்து திரைப்படத்தின் கதையை உருவாக்கி உள்ளார்கள். படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக அபர்ணா பாலமுரளி நடித்துள்ளார்.

மேலும் சூரரைப்போற்று திரைப்படத்தை 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் மற்றும் சிக்யா நிர்வாணம் இணைந்து தயாரித்துள்ளது, இந்த திரைப்படம் திரையரங்கில் வெளியிடப்பட்ட வேண்டியதுதான் ஆனால் ஊரடங்கு காரணமாக படத்தின் ரிலீஸ் தள்ளிப்போனது.

ஆனால் படத்தை OTT இணையதளத்தில் வெளியிட முடிவு செய்தார்கள், படத்தை அக்டோபர் 30-ஆம் தேதி அமேசான் பிரைம் இணையதளத்தில் நேரடியாக ரிலீஸ் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது, இந்த நிலையில் விமானப்படையின் தடையில்லா சான்றிதழ் கிடைப்பதில் தாமதம் ஆவதால் படத்தை ரிலீஸ் தள்ளிக்போய்கொண்டே போகிறது.

இந்த நிலையில் படத்தை தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளது, மேலும் படத்தின் டிரைலரை வருகின்ற 26 ஆம் தேதி காலை 10 மணிக்கு ரிலீஸ் செய்ய இருக்கிறது படக்குழு இதனை சூர்யா அதிகாரபூர்வமாக வீடியோ மூலம் அறிவித்துள்ளார்.