நடிகர் சூர்யா தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருகிறார் இவர் நீண்ட காலமாக ஹிட் படத்தை கொடுத்தாக வேண்டும் என்ற காலகட்டத்தில் இருக்கிறார், இந்த நிலையில் தற்போது சுதா கொங்கரா இயக்கத்தில் சூரரைப்போற்று திரைப்படத்தில் நடித்துள்ளார்.
இந்த திரைப் படத்தில் சூர்யாவுடன் இணைந்து அபர்ணா நடித்துள்ளார், இந்த திரைப்படத்திலிருந்து ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது, சூர்யா இந்த திரைப்படத்தை பெரிதும் நம்பியிருக்கிறார்..
இந்த நிலையில் ஒரு சில மர்ம நபர்கள் சூரரைப்போற்று திரைப்படத்தை பார்த்து விட்டதாக சமூக வலைத்தளத்தில் புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்கள். அந்த புகைப்படங்களைப் பார்த்தால் சூரரைப்போற்று திரைப்படத்தில் உள்ள இடைவெளி காட்சியை போல்தான் இருக்கிறது எனவும் பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
இந்த நிலையில் சூரரைப்போற்று திரைப்படம் இணையதளத்தில் லீக் ஆகி இருக்குமோ என்ற அச்சம் அனைவரிடத்திலும் ஏற்படுத்தியுள்ளது.
இதோ அந்த புகைப்படம்.