சூரரைப்போற்று படத்தை பார்த்துவிட்டு மிரண்டுபோய் விமர்சனத்தை சொன்ன அதிகாரி.! என்ன சொன்னார் தெரியுமா.?

soorarai-pottru

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் சூர்யா, இவர் நடிப்பில் தற்போது சூரரைப்போற்று திரைப்படம் உருவாகி உள்ளது இந்த திரைப்படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது, ஆனால் சூர்யாவின் தயாரிப்பில் ஜோதிகா நடிப்பில் வெளியாகிய பொன்மகள்வந்தாள் திரைப்படத்தை OTT யில் வெளியிடப்பட்டது.

இதற்கு ஆதரவு கிடைத்தாலும் பலரிடம் விமர்சனங்கள் தான் எழுந்தது அது மட்டுமில்லாமல் திரையரங்க உரிமையாளர்கள் பலரும் இனி சூர்யாவின் திரைப்படத்தை திரையிட மாட்டோம் என்ற அளவிற்கு கடும் கோபத்தை வெளிப்படுத்தினார்கள், ஆனால் OTT யில் வெளியிட்ட பொன்மகள் வந்தாள் திரைப்படம் எதிர்பார்த்த வருமானம் இல்லாததால் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள சூரரைப்போற்று திரைப்படத்தை தங்களிடம் கொடுத்து விடுங்கள் என சூர்யாவிடம் மல்லு கட்டினார்கள்.

ஆனால் சூர்யா ஒரே போடாக என்னுடைய படம் திரையரங்கில் தான் வரும் என கூறினார் இது ஒருபுறமிருக்க, இந்த லாக்டவுன் முடிந்ததும் சூர்யாவின் சூரரை போற்று முதன்முதலாக திரையரங்கில் வெளியிட அதிக வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன. அதனால் சூர்யாவின் சூரரைப்போற்று திரைப் படத்திற்கு சென்சார் சர்டிபிகேட் அவசரஅவசரமாக வாங்கி உள்ளார்கள்.

சூரரை போற்று  திரைப்படத்தில் மாறா என்ற கதாபாத்திரம் மிகவும் அற்புதமாக வந்துள்ளதாக படத்தை பார்த்த சென்சார் அதிகாரிகள் கூறியுள்ளார்கள், படத்திற்கு யு சர்டிபிகேட் கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது சூரரைப்போற்று திரைப்படத்தை பார்த்த சென்சார் அதிகாரி ஒருவர் சூர்யா மற்றும் சுதா கொங்கரா அவர்களைப் பெரிதும் பாராட்டியுளளார்.

அதுமட்டும் இல்லாமல் இதுபோல் ஒரு திரைப்படம் இதுவரை பார்த்தது இல்லை எனவும் கண்டிப்பாக இந்த திரைப்படம் தமிழ்நாட்டில் 100 கோடிக்கு மேல் வியாபாரம் ஆகும் எனவும் கூறினார்களாம் ஆந்திராவில் தற்போது வரை 15 கோடிக்கு மேல் விற்பனை ஆகி விட்டது, ஆகமொத்தம் இந்த திரைப்படம் 200 கோடி வரை வருமானம் ஈட்டும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த வருடம் சூர்யாவின் சில சரிவுகளில் இருந்து இந்தப் படத்தின் மூலம் மீண்டு வந்து சரி செய்து விடலாம் என சூர்யா பெரிதும் இந்த திரைப்படத்தை நம்புகிறார், ரசிகர்களும் படத்தை திரையில் காண ரெடியாகி விட்டார்கள்.