சூரரைப்போற்று திரைப்படத்தில் விமான டிக்கெட் கொடுக்கும் பெண்ணாக நடித்தவர் யார் தெரியுமா.? தெரிஞ்சா ஷாக் ஆகிடுவிங்க

தமிழ் சினிமாவில் நடிகர் சிவகுமாரின் மகன் என்ற அடையாளத்துடன் நுழைந்தாலும் தனக்கான திறமையை வெளிப்படுத்தி ஏராளமான திரைப்படத்தில் நடித்து முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் சூர்யா இவர் ஆரம்ப காலகட்டத்தில் பல தோல்வி திரைப் படங்களை கொடுத்துள்ளார் ஆனால் தோல்வி திரைப்படங்களை கொடுத்தாலும் அதிலிருந்து மீண்டு வரவேண்டும் என அயராது உழைத்து வெற்றி திரைப்படங்களை கொடுத்து இன்று ரசிகர்கள் மனதில் இடம் பிடித்துள்ளார்.

சூர்யாவிற்கு தற்பொழுது ரசிகர் பட்டாளம் இருந்து வருகிறது தற்பொழுது சூர்யா நடிகராக மட்டுமல்லாமல் தயாரிப்பாளராகவும் களமிறங்கி கலக்கி வருகிறார். அந்த வகையில் கடைசியாக அமேசான் ப்ரைம் OTT இணையதளத்தில் நான்கு திரைப்படங்களை தயாரித்து வெளியிட்டுள்ளார். இந்த நிலையில் தீபாவளி தின சிறப்புத் திரைப்படமாக வெளியாகிய ஜெய் பீம் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வெற்றிகரமாக ஓடியது.

இந்த நிலையில் சூர்யா நடித்து தயாரித்த திரைப்படம் தான் சூரரைப்போற்று இந்த திரைப்படம் அமேசான் ப்ரைம் OTT இணையதளத்தில் வெளியானது. இந்த திரைப்படத்தை பார்த்த பல பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் படத்திற்கு நல்ல விமர்சனங்களை கொடுத்தார்கள். உண்மையான கதையை மையமாக வைத்து இந்த திரைப்படம் உருவானது கோபிநாத் தனது டுவிட்டர் பக்கத்தில் ட்விடையும் பதிவிட்டார்.

ஏனென்றால் கோபிநாத்தின் வாழ்க்கை வரலாறுதான் இந்த திரைப்படமாக உருவானது அதைப் பார்த்த கோபிநாத் நான் கடந்த இரவு தான் இந்த திரைப்படத்தை பார்த்தேன் என்னால் சிரிப்பையும் அழுகையும் அடக்கவே முடியவில்லை இந்த படத்தை பார்த்த பிறகு என்னுடைய கால நினைவுகளை மீண்டும் கொண்டு வந்தது. அதேபோல் பாடலாசிரியர் விவேக் அவர்களும் டுவிட்டர் பக்கத்தில் அவர் அழும் இடங்களில் நம்மை அறியாமலேயே கண்ணீர் வரவழைக்கிறது.

அதேபோல் இந்த திரைப்படத்தில் வரும் ஒவ்வொரு காட்சியும் எத்தனை முறை பார்த்தாலும் நம் மனதில் நீங்காத இடத்தை பிடிக்கும். அந்தவகையில் மறைந்த முன்னாள் குடியரசு தலைவர் ஏபிஜே அப்துல் கலாம் இந்த திரைப்படத்தில் நடித்தது போல் காட்சிகள் அமைந்திருக்கும். இந்தநிலையில் இந்த திரைப்படத்தில் சூர்யா விமானத்தில் பயணம் செல்ல பணம் இல்லாததால் டிக்கெட் கொடுக்க மறுப்பார்கள்.

soorarai potru
soorarai potru

அந்த டிக்கெட் கொடுக்கும் கவுண்டரில் ஒரு பெண் இருப்பார் அவர் யாரென்று தற்பொழுது வெளியாகி உள்ளது அவர் பெயர் அலிஷா மிலானி இவர் இதற்கு முன்பே ஒரு திரைப்படத்தில் நடித்துள்ளார் அந்த திரைப்படத்தின் பெயர் நிர்ப்பந்தம். அதுமட்டுமில்லாமல் இவர் மிஸ் சந்திராபூர் மற்றும் மகாராஷ்டிரா  ஆகிய பட்டங்களையும் வென்றுள்ளார்.

இவர்தான் இந்த திரைப்படத்தில் நடித்துள்ளார் என்பது பலருக்கும் தற்போது தான் தெரிய வந்துள்ளது இந்த புகைப்படம் ரசிகர்களிடம் வைரலாகி வருகிறது.

soorarai potru
soorarai potru