இங்கு இருக்கும் கடைசி தொழிலாளியை சொந்த ஊருக்கு அனுப்பும் வரை என் பணி தொடரும்.! இவன் இவர்தான் ரியல் ஹீரோ குவியும் பாராட்டுக்கள்

sonu
sonu

புலம்பெயர் தொழிலாளர்கள் அவர்களின் சொந்த ஊருக்கு செல்வதற்கே தன்னுடைய சொந்த செலவில் பல தொழிலாளர்களை அனுப்பிவைத்துள்ள சோனு கடைசி தொழிலாளி செல்லும் வரை என்னுடைய பணி தொடரும் என கூறியுள்ளார்.

நாடு முழுவதும் கொரனோ வைரஸ் வேகமாக பரவி வருவதால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது அதனால் பல மக்கள் தங்களுடைய சொந்த ஊருக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது அதனால் மகாராஷ்டிரா கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் கூலி தொழில் செய்து வரும் புலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு செல்ல முடியாமல் தவித்து வந்தார்கள்.

அவர்களை தன்னுடைய சொந்த செலவில் அவரவர் ஊருக்கு அனுப்பி வைத்து வருகிறார் நடிகர் சோனு சூட், இவரின் இந்த செயலுக்கு மக்கள் மத்தியில் மிகவும் பாராட்டு  மற்றும் வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது, அதுமட்டுமில்லாமல் இவரின் இந்த செயலுக்கு பின்னாடி அரசியல் நோக்கம் இருப்பதாகவும் விமர்சித்து வருகிறார்கள்.

இந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் சோனு எனக்கு அரசியலில் துளிகூட ஆர்வம் இல்லை என அதிரடியாக தெரிவித்தார், அதுமட்டுமில்லாமல் தற்போது முன்னணி நடிகராக வலம் வந்தாலும் மும்பைக்கு நானும் புலம்பெயர்ந்த வந்தவன்தான் என்பதால் அவர்களின் வலி வேதனை எனக்கு தெரியும் என மனதை உருக்கும் விதத்தில் கூறியுள்ளார்.

ஊரு விட்டு ஊரு வந்து பல்வேறு கஷ்டங்களையும் துக்கங்களையும் கடந்து இந்த  நிலையை அடைந்துள்ளதால் குடும்பத்தை பிரிந்து ஒவ்வொரு நாளும் வேதனையில் இருக்கும் தொழிலாளர்கள் வலி வேதனை அறிந்தே இந்த பணியை செய்து வருகிறேன் எனக்கூறினார் அதுமட்டுமில்லாமல் சொந்த ஊருக்கு பேருந்து வசதி இல்லாமல் சிலர் நடந்தே செய்வதை பார்க்கும் பொழுது மனம் வலிக்கிறது அதனால் கடைசி தொழிலாளி செல்லும் வரை என்னுடைய பணி தொடரும் என அதிரடியாக அறிவித்துள்ளார்.

இதுவரை 20 ஆயிரம் தொழிலாளர்களை பேருந்து மற்றும் ரயில், விமானம் மூலம் அனுப்பி வைத்து மக்கள் மத்தியில் ரியல் ஹீரோவாக உயர்ந்துள்ளார் சோனு.