பிரபல வில்லன் நடிகரான ஏழைகளின் நாயகன் என அழைக்கப்படும் சோனு சூட்டுக்கு விருது வழங்கும் ஐ.நா!! கொரோனாவில் என்ன செய்துள்ளார் பாருங்கள்.

soonu sood
soonu sood

soonu sood receive humanitarian award from undp: உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா இந்தியாவிலும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. அப்படி இருக்கும் சூழ்நிலையில் கொரோனா ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்த சூழ்நிலையில் நடிகர் சோனு சூட் செய்த உதவிகள் எண்ணற்றவை.

அதில் சில இந்த சூழ்நிலையில் பல தொழிலாளர்கள் போக்குவரத்து வசதி எதுவும் இல்லாததால் தங்களது சொந்த ஊருக்கு செல்ல முடியாமல் தவித்து வந்தனர். அந்த நிலையில் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களுக்கு தன்னுடைய சொந்த செலவில் வெளிமாநிலங்களுக்கு செல்ல ஏற்பாடு செய்தார்.

மேலும் சிலருக்கு விமானம் மூலம் சொந்த ஊருக்கு செல்ல உதவி செய்தார். இந்த கொரோனா சமயத்தில் வேலை இழந்தவர்களுக்கு மீண்டும் வேலை கிடைக்க ஏற்பாடு செய்தார். அதோடு மட்டுமில்லாமல் கர்நாடகாவில் ஒரு விவசாயி தனது இரண்டு மகள்களை கட்டி உழவு செய்தார் அவர்களுக்காக தனது சொந்த செலவில் டிராக்டரையே  வாங்கிக் கொடுத்தார்.

இது போன்ற பல மனிதநேய செயல்களை செய்த இவரை இந்திய அளவில் பாராட்டத்தக்க விஷயமாக கருதப்பட்டது. மேலும் இவரை பல ஊடகங்கள் ஏழைகளின் நாயகன் எனவும் கூறினார்கள். எனவே இதை கருத்தில் கொண்டு தற்போது  ஐ நா சபை  நடிகர் சோனு சூட்டிற்கு சிறப்பு விருதினை வழங்க அறிவித்துள்ளது.

மக்களின் இயல்பு வாழ்க்கைக்கு உதவிய சோனு சூட்டிற்க்காக மனிதநேயத்தை  பாராட்டும் விதமாக சஸ்டைபள் டெவலப்மென்ட் கோல்ஸ் என்ற விருதினை ஐ நா வழங்க இருக்கிறது. எனவே அதனை மதிக்கும் பொருட்டு சோனு சூட் ஐ நா விற்கு நன்றியை தெரிவித்துள்ளார். மக்கள் போற்றும் நாயகனுக்கு இப்படி ஒரு சிறப்பு விருதினை வழங்கியதற்கு ஐநா விற்க்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.