தமிழ் சினிமாவில் ஒரு சில நடிகர் நடிகைகள் ஒரே ஒரு திரைப்படத்தின் மூலம் ஒட்டுமொத்த ரசிகர்களையும் திரும்பி பார்க்க வைத்து விட்டு அதன் பிறகு ஆள் அட்ரஸ் இல்லாமல் போய்விடுகிறார்கள். அப்படித்தான் நடிகை நிகிதாவும் இவர் வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான சரோஜா என்ற திரைப்படத்தின் மூலம் ஒரு பாடலுக்கு நடனமாடி இருப்பார்.
இந்த திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்து சிவா பிரேம்ஜி வைபவ் சரண் போன்ற பல்வேறு பிரபலங்கள் நடித்து இருந்தது மட்டுமல்லாமல் இத்திரைப்படத்தில் இடம்பெற்ற சூடான கோழி என்ற பாடலானது பட்டி தொட்டி எங்கும் மிகவும் பிரபலமாக பேசப்பட்டது.
இவ்வாறு இந்த கிளாமர் பாடலுக்கு நடனமாடி ரசிகர்களின் மனதை கொள்ளையடித்த நடிகைதான் நிகிதா. இவர் மும்பையை பூர்விகமாக கொண்டவர். இவ்வாறு பிரபலமான நமது நடிகை இந்தி தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சீரியல் மூலம் தான் சின்னத்திரையில் நுழைந்தார்.
அதன்பிறகு இவருடைய நடிப்பு திறனின் மூலமாக தெலுங்கு திரைப்படத்தில் கதாநாயகியாக நடிக்கும் வாய்ப்பினை பெற்றார். தமிழில் குறும்பு என்ற திரைப்படத்திலும் இவர் கதாநாயகியாக நடித்துள்ளார் ஆனால் இந்த திரைப்படத்தில் இவருக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரம் இரண்டாம் கட்ட கதாபாத்திரம்.
மேலும் இந்த திரைப்படங்களை தொடர்ந்து சரத்குமார் சிபிராஜ் போன்ற பல்வேறு நடிகர்களின் திரை படத்தில் இவர் கதாநாயகியாக நடித்துள்ளார் ஆனால் இவர் பிரபலமானது எனவோஸ் சரோஜா திரைப்படத்தில் இடம்பெற்ற பாடல் மூலம் தான்.
இவ்வாறு பிரபலமான நமது நடிகைக்கு தற்சமயம் சரியான பட வாய்ப்பு இல்லாததால் காரணமாக எந்தவொரு திரைப்படத்திலும் நடிக்காமல் இருந்து வருகிறார் ஆனால் கன்னடத்தில் இவருக்கு மவுசு அதிகம் இதன் காரணமாக கன்னட மொழி சினிமாவில் மட்டும் தொடர்ந்து நடித்து வருகிறார் அதுமட்டுமில்லாமல் பிரபல கன்னட நடிகர் தர்ஷன் என்பவருடன் கள்ளத்தொடர்பு இருந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.இதன் காரணமாக மூன்று ஆண்டுகள் கன்னடத்தில் எந்த ஒரு திரைப்படத்தில் நடிக்க முடியாமல் போய்விட்டன.
பின்னர் தெலுங்கு மலையாளம் திரைப்படத்தில் நடித்து வந்தாலும் சரியான வாய்ப்பு இல்லாத காரணமாக கடந்த 2017 ஆம் ஆண்டு ககன்தீப்சிங் என்பவரை திருமணம் செய்துகொண்டார் இவ்வாறு திருமணத்திற்கு பிறகு ஒரு அழகான பெண் குழந்தையை பெற்றெடுத்த நமது நடிகை குடும்பம் குட்டியாக இருக்கும் புகைப்படங்களை சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டு உள்ளார். இவர் குடுபத்துடன்வெளியிட்ட புகைப்படங்கள் சமூக வலைதளப் பக்கத்தில் மிக வைரலாக பரவி வருகிறது.