கூலி தொழிலாளர்களின் கடவுள் சோனு சூட்.! நெருக்கடியில் தான் மனிதர்களின் உண்மை முகம் வெளிச்சத்திற்கு வரும்.

sonu

சினிமாவுலகில் பயணித்து வரும் நடிகர்கள் பலரும் மக்கள் மற்றும் ரசிகர்களுக்கு பல நலத்திட்ட உதவிகளை செய்து பிரபலமடைந்து வருகின்றன அத்தகையவர்களை எல்லாம் ஒதுக்கிவிட்டு தற்போது கொரோனா காலத்தில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்து சிறப்பாக வந்து கொண்டு இருப்பவர் நடிகர் சோனு சூட். இவர் செய்த பல நலத்திட்ட உதவிகளை பார்த்த ரசிகர்கள் இதுபோன்ற மக்கள் தவிக்கும் காலத்தில் உதவி செய்த உங்களை நாங்கள் கடவுள் போல பார்க்கிறோம் என்று கூறி அவரை பாராட்டி வருகின்றனர்.

சோனு சூட் அவர்களுக்கு  நேற்று தனது 47 வது பிறந்தநாள். சினிமா உலகில் வில்லனாக நடித்து வரும் சோனு சூட் கொரோனா காலத்தில் ஹீரோவாக மாறி உள்ளது அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது அதுவும் சினிமா ஹீரோ அல்ல நிஜ ஹீரோவாக மாறி மக்களுக்கு பல நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறார்.

sonu

ஊரடங்கு உத்தரவு காரணமாக  பிற மாநில தொழிலாளர்கள் தங்களது வீடு திரும்ப அவதிப்பட்டு வந்த அவர்களுக்கு சோனு சூட் பல ஆயிரக்கானபஸ்சுகளை  வாடகை வாங்கி அதன் மூலம் கூலி தொழிலாளர்களை வீட்டுக்கு அனுப்பி வைத்தார் மேலும் தனி விமானத்தில் மூலமாகவும் தொழிலாளர்களை வீட்டுக்கு அனுப்பி வைத்தார்.

sonu

மேலும் அவர் ஆந்திராவில் வறுமை காரணமாக மாட்டுக்களுக்கு பதிலாக மகள்களை பூட்டி உழவு வேலை பார்த்த வந்த ஆந்திர விவசாயிக்கு truk வாங்கி கொடுத்தார் இப்படியே பல சிறப்பம்சங்களை மக்களுக்கு கொடுத்து வருகிறார் இதை அறிந்த மக்கள் மற்றும் ரசிகர்கள் இவரை ரியல் ஹீரோ என்று கூறிவருகின்றனர் மேலும் நெருக்கடியில் தான் மனிதர்களின் உண்மை முகத்தை வெளிச்சம் காட்டும் என கூறி வருகின்றனர் ரசிகர்கள் நேற்று தனது பிறந்தநாளை சமூகவலைதளத்தில் சிறப்பாக கொண்டாடினர்.