பெத்தா இப்படி ஒரு பிள்ளையை பெக்கணும்.. சினிமாவில் அப்பாவை மிஞ்சிய மகன்கள்

Surya
Surya

சினிமா உலகை பொருத்தவரை முன்னணி  நடிகர்களை தொடர்ந்து அவருடைய வாரிசுகளும் சினிமா உலகில் ஆதிக்கம் செலுத்துகின்றனர். தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்து ஒரு கட்டத்தில் தனது அப்பாவையே மிஞ்சி பெருமை சேர்க்கின்றனர். அப்படிப்பட்ட நடிகர்களை பற்றி விலாவாரியாக பார்ப்போம்..

எஸ் ஏ சந்திரசேகர் – விஜய் :  80, 90 கால கட்டங்களில் விஜயகாந்த் போன்ற டாப் நடிகர்களை வைத்து இயக்கி வெற்றிகண்ட எஸ் ஏ சந்திரசேகர் ஒரு கட்டத்தில் தனது மகன் விஜயை வளர்த்த விட தொடர்ந்து படங்களை இயக்கியும், தயாரித்தும் தூக்கி விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது அதன் பிறகு தனக்கென ஒரு பாணியை பிடித்து விஜய் வளர்ந்தார். தற்பொழுது தமிழ் சினிமாவில் வசூல் மன்னனாக ஓடுகிறார்.

டி ராஜேந்திரன் –  சிம்பு : தமிழ் சினிமாவில் பன்முகத் தன்மை கொண்டவர் டி ராஜேந்தர் இயக்குனர், நடிகர், இசையமைப்பாளர் என பல அவதாரங்கள் எடுத்தார் அவரைத் தொடர்ந்து அவரது மகன் சிம்புவும் குழந்தையாக இருக்கும் போதே சினிமா உலகில் நடிக்க தொடங்கி விட்டார்.  இவரும் இயக்குனர் நடிகர்  நடன கலைஞர் இசையமைப்பாளர் பாடகர் என பன்முகத்தன்மை கொண்டு முன்னணி நடிகராக தமிழ் சினிமாவில் ஓடிக் கொண்டிருக்கிறார். இவருக்கென லட்சக்கணக்கான ரசிகர்கள் இருக்கின்றனர். சிம்பு கடைசியாக நடித்த மாநாடு, வெந்து தணிந்தது காடு போன்ற படங்கள் வெற்றி பெற்றது.

சிவகுமார்  –  சூர்யா : 70,80 காலகட்டங்களில் பிரபலமான நடிகராக வந்தவர் சிவகுமார்.  சிவாஜி நடித்த காலகட்டத்திலேயே இவரும் நடிக்க வந்துவிட்டார் அதன் பிறகு ரஜினி கமல் போன்றவர்களின் காலகட்டத்திலும் இவர் நடித்தார் ஆனால் அவர்களிடம் ஈடுகொடுக்க  முடியவில்லை ஒரு கட்டத்தில் படங்களில் ஹீரோவாக நடிப்பதை விட்டு முக்கிய மற்றும் குணசத்திர கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.

இவரை தொடர்ந்து அவரது மகன் சூர்யா சினிமாவில் முதலில் அதிக ஈடுபாடு காட்டவில்லை என்றாலும் போகப்போக தனது திறமையை வளர்த்துக்கொண்டு தற்பொழுது முன்னணி நடிகராக ஓடிக் கொண்டிருக்கிறார். இவர் நடிப்பில் கங்குவா திரைப்படம் பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது.

சாருஹாசன் – சுஹாசினி  : சாருஹாசன் மிகப்பெரிய ஒரு குணசத்திர நடிகர் ஆனால் அவரை தொடர்ந்து வந்த அவரது மகள் சுஹாசினி பிரபலமான நடிகை வந்தார் அதுமட்டுமல்லாமல் ஒரு தயாரிப்பாளராகவும் இருந்து வருகிறார்.