கதாநாயகியாக கம்பேக் கொடுக்கும் சோனியா அகர்வால்.. டைட்டிலுடன் கூடிய போஸ்டர் இதோ

sonia agarwal

Actress Sonia Agarwal: தமிழ் சினிமாவில் ஒரு காலகட்டத்தில் ரசிகர்களின் கனவு கனியாக வலம் வந்த சோனியா அகர்வால் பெரிதாக சமீப காலங்களாக படங்களில் நடிக்காமல் இருந்து வந்த நிலையில் தற்பொழுது மீண்டும் கதாநாயகியாக சினிமாவிற்கு கம்பேக் கொடுத்துள்ளார்.

அந்த வகையில் தற்பொழுது இவர் முக்கிய கேரக்டரை நடித்து வரும் படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சற்று முன்பு வெளியாகி சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழ் திரைவுலகில் கடந்த 2000ஆம் ஆண்டுகளில் முன்னணி நடிகையாக வலம் வந்த சோனியா அகர்வால் பல வெற்றி திரைப்படங்களை தந்தார்.

அப்படி தனுஷ்வுடன் இணைந்து காதல் கொண்டேன் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமான இவர் இதனை தொடர்ந்து விஜய்யின் மதுர, சிம்பு நடித்த கோவில், தனுஷ் நடித்த புதுப்பேட்டை உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்திருந்தார். இந்நிலையில் இவர் இயக்குனர் செல்வராகவனை காதலித்து திருமணம் செய்துக் கொண்டார்.

திருமணம் செய்து கொண்ட சில வருடங்கள் மட்டுமே ஒன்றாக வாழ்ந்து வந்த செல்வராகவன் சோனியா அகர்வால் பிறகு விவாகரத்தை பெற்று பிரிந்தனர். எனவே இதற்குப் பிறகு பெரிதாக படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைக்காமல் இருந்து வந்த இவருக்கு தற்பொழுது சில திரைப்படங்களில் நடிப்பதற்கான வாய்ப்புகள் கிடைத்து வருகிறது.

அப்படி தற்பொழுது சோனியா அகர்வால் முக்கிய கேரக்டரில் நடித்திருக்கும் ‘7/G’ என்ற படத்தின் டைட்டில் உடன் கூடிய போஸ்டரை பட குழு வெளியிட்டுள்ளார்கள். இதனை சோனியா அகர்வால் தனது இன்ஸ்டாகிராமில் பகிர சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இந்த படத்தினை ஹாரூன் இயக்க சித்தார் விபின் இசையமைக்க உள்ளார்.

sonia agarwal
sonia agarwal

மேலும் கண்ணன் ஒளிப்பதிவில் டான் போஸ்கோ படத்தொகுப்பில் உருவாக உள்ளது. இந்த படத்தில் சோனியா அகர்வாலை தொடர்ந்து இஸ்மிருதி வெங்கட் முக்கிய கேரக்டரில்நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த படம் குறித்த தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.