நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி வரும் வாரிசு திரைப்படத்தின் படப்பிடிப்பில் இருந்து பாடல் காட்சி படப்பிடிப்பு ஒன்று தற்பொழுது இணையதளத்தில் வெளியாகி உள்ளது. அதாவது இதற்கு முன்பே வாரிசு படத்தின் படப்பிடிப்பு காட்சிகளின் வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் போன்றவை தொடர்ந்து சோசியல் மீடியாவில் வெளியான நிலையில் இதனால் படகு குழுவினர்கள் இதற்கு மேல் யாரும் படப்பிடிப்பு தளத்திற்கு போன் எடுத்து வரக்கூடாது என உத்தரவு போடப்பட்டு இருந்தது.
இப்படிப்பட்ட நிலையில் சில வாரங்கள் கழித்து தற்பொழுது மீண்டும் வாரிசு படத்தில் இருந்து பாடல் காட்சி கடைப்பிடிப்பின் புகைப்படம் ஒன்று வெளியாகி உள்ளது. அதாவது இயக்குனர் வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் தான் வாரிசு. இந்த படத்தினை தில்ராஜ் இயக்க ஒரு எமோஷனல் குடும்பம் கதையை மையமாக வைத்து இந்த படம் உருவாகி வருகிறது.
மேலும் இந்த படத்தில் நடிகர் விஜய் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடிப்பதாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது மேலும் இந்த படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார். இவரை தொடர்ந்து பிரகாஷ்ராஜ், பிரபு, சரத்குமார், கணேஷ், வெங்கட்ராமன், ஷாம், குஷ்பூ, சங்கீதா, யோகி பாபு, சம்யுக்தா உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
மேலும் முதன் முறையாக நடிகர் விஜயின் படத்திற்கு தமன் இசையமைத்து இருக்கிறார் எனவே தீபாவளியை முன்னிட்டு இந்த படத்தின் முதல் சிங்கல் டிராக் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படிப்பட்ட நிலையில் வாரிசு திரைப்படத்தின் படப்பிடிப்பு மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் தற்போது இறுதிக்கட்ட படப்பிடிப்பை எட்டி உள்ளது எனவே விரைவில் இந்த படப்பிடிப்பு முடிய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் இதனை தொடர்ந்து விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்க இருக்கும் அடுத்த படத்தில் இணைய இருக்கிறார். இவ்வாறு வாரிசு படத்தின் காட்சிகள் தொடர்ந்து சோசியல் மீடியாவில் கசித்து வந்த நிலையில் படக் குழுவினர்கள் பல கட்டுப்பாடுகளை விதித்திருந்தனர் இருப்பினும் தற்பொழுது இந்த பிரச்சனை முடிவுக்கு வரவில்லை அந்த வகையில் வாரிசு படத்தில் இருந்து பாடல் காட்சி படப்பிடிப்பு ஒன்று தற்பொழுது இணையதளத்தில் வைரலாகி வருகிறது. அதில் கடைசியாக நடிகர் விஜய் பாடம் குரலும் கேட்கிறது.