தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகர் மாதவன் இவருடைய மகன் வேதாந்த் சிறுவயதில் இருந்து நீச்சல் விளையாட்டில் அதிக ஆர்வம் கொண்டு இருக்கிறார். அது மட்டுமல்லாமல் நீச்சல் விளையாட்டிற்காக பயிற்சி பெற்றிருக்கிறார்.
தற்போது 17 வயதான இவர் இந்தியாவின் சார்பில் சர்வதேச அளவிலான நீச்சல் விளையாட்டு போட்டியில் பங்கேற்று வருகிறார். அந்த வகையில் கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற கோலோ போட்டியில் 36 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களை சேர்த்து மொத்தம் 5000 வீரர்கள் இந்த நீச்சல் போட்டியில் கலந்து கொண்டிருக்கிறார்கள்.
இதில் மகராஷ்டிரா அணிக்காக வேதாந்த் விளையாடி உள்ளார். விளையாடுவது மட்டுமல்லாமல் அதில் ஐந்து தங்கம் மற்றும் இரண்டு வெள்ளி பதக்கங்களை வென்றார். அதன் பிறகு மலேசியாவில் நடைபெற்ற மலேசியன் இன்விடேஷன் ஏஜ் குரூப் சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்று ஐந்து தங்கப் பதக்கங்களை வென்றிருக்கிறார்.
இதனால் வேதாந்தத்துக்கு வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் இருக்கிறது. இது குறித்து வேதாந்தின் அப்பாவும் நடிகருமான மாதவன் தனது ட்விட்டர் பக்கத்தில் தன்னுடைய மகனை வாழ்த்தும் விதமாக மலேசியா நாட்டில் நடைபெற்ற மலேசியன் இன்விடேஷன் ஏஜ் குரூப் சாம்பியன்ஷிப் போட்டிகளில் வேதாந்த் இந்தியாவிற்காக விளையாடி 50 மீட்டர், 100 மீட்டர், 200 மீட்டர், 400 மீட்டர் மற்றும் 1500 மீட்டர் ஆகிய பிரிவுகளில் ஐந்து தங்க பதக்கங்களை வென்றிருக்கிறார்.
என்று மாதவன் தனது ட்விட்டரில் பகிர்ந்து பெருமைப்படுத்தி வருகிறார். இவருடைய இந்த ட்விட்டர் பதிவும் வேதாந்த் வென்றதற்கும் வாழ்த்துக்கள் குவிந்து கொண்டே வருகிறது. மேலும் மேலும் அவர் வெற்றி பெற வேதாந்தை வாழ்த்தி வருகிறார்கள். இனிவரும் போட்டிகளிலும் இதுபோல ஆர்வத்துடன் விளையாடி வெற்றி பெற வேண்டும் என சிலர் வாழ்த்தி வருகிறார்கள். அடுத்த போட்டிகளிலும் நடிகர் மாதவனின் மகன் வேதாந்த் கலந்து கொண்டு வெற்றி வெற்றி பெறுவார் என பலரும் வாழ்த்தி வருகிறார்கள்.