சினிமாவுலகில் எந்த கதை கொடுத்தாலும் அந்த கதைக்கு ஏற்றவாறு தனது கதாபாத்திரத்தை மாற்றிக்கொண்டு நடித்து அதை மிகப்பெரிய ஒரு வெற்றிப்படமாக மாற்றுவது தனுஷ் – க்கு ரொம்ப பிடிக்கும். அப்படி இவர் நடிப்பில் வெளியான ஆடுகளம் வடசென்னை அசுரன் கர்ணன் ஆகிய படங்களில் அதை நீங்கள் பார்த்திருக்க முடியும்.
ஆனால் அண்மைகாலமாக தனுஷ் நடிக்கும் திரைப்படங்கள் பெரிய அளவு வெற்றியை ருசிக்க தவறுவதால் தனது அடுத்தடுத்த திரைப்படத்தின் கதையை சரியாக தேர்வு செய்து தனது திறமையை வெளிக்காட்டி நடித்து வருகிறார். அந்த வகையில் தனுஷ் கையில் தற்போது வாத்தி, நானே வருவேன் ஆகிய திரைப்படங்கள் இருக்கின்றன.
இப்பொழுது தனது அண்ணன் செல்வராகவனுடன் கைகோர்த்து நானே வருவேன் என்ற திரைப்படத்தில் விறுவிறுப்பாக நடித்து வருகிறார் இந்த ஷூட்டிங் வெற்றிகரமாக முடிந்தது தொடர்ந்து தனுஷ் வாத்தி திரைப்படத்தின் சூட்டிங்கை தொடங்குவார் என தெரிய வருகிறது அதனால் படத்தின் கதைக்கு ஏற்றபடியே நடிகர் நடிகைகளை படக்குழு தேர்வு செய்து வருகிறது.
இந்த நிலையில் தற்போது வாத்தி திரைப்படம் குறித்து ஒரு சுவாரசியத் தகவல் ஒன்று வெளியாகி உள்ளது அதன்படி பார்க்கையில் ஏற்கனவே தனுஷுடன் அசுரன் படத்தில் நடித்த கென் கருணாஸ் மீண்டும் தனுஷுடன் இரண்டாவது முறையாக கைகோர்த்து வாத்தி திரைப்படத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது வாத்தி திரைப்படத்தில் கென் கருணாஸ் பள்ளி மாணவர்களில் ஒருவராக நடிக்க இருப்பதாக தகவல்கள் உலா வருகின்றன.
அசுரன் படத்தில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்திய கென் கருணாஸ் இந்த திரைப்படத்திலும் தனுஷுடன் இணைந்து தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி படத்தின் வெற்றிக்கு உருதுணையாக இருப்பார் என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.