சூர்யாவைப் பற்றி நமக்குத் தெரியாத சில விஷயங்கள்.!

Surya
Surya

Surya : தொடர்ந்து வித்தியாசமான படங்களை கொடுத்து மக்களை சிந்திக்கவும், சிரிக்கவும் வைத்து வருபவர் சூர்யா இவர் நடிப்பில் கடைசியாக வெளியான ஜெய் பீம், எதற்கும் துணிந்தவன்  போன்ற படங்கள் வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற நிலையில் அடுத்ததாக சிறுத்தை சிவா உடன் கைகோர்த்து கங்குவா..

படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் மிகப்பெரிய ஒரு வரலாற்று படமாக உருவாகி வருகிறது. கங்குவா படத்தை முடித்த கையோடு வெற்றிமாறன் கைகோர்த்து வாடிவாசல் திரைப்படத்திலும் நடிக்க ரெடியாக இருக்கிறார்.  இந்த நிலையில் நடிகர் சூர்யா பற்றிய சில சுவாரஸ்யமான விஷயங்களை பார்ப்போம்..

1.  சூர்யாவின் உண்மையான பெயர் சரவணன். சிறுவயதில் சகோதரன் கார்த்தியை தன் போட்டியாளனாக மட்டுமே பார்த்து வளர்ந்திருக்கிறார் சூர்யா.

2. காக்க காக்க அன்புச்செல்வன் படத்திற்காக சூர்யா அவர்கள் திரு சைலேந்திரபாபு ஐபிஎஸ் மற்றும் திரு விஜயகுமார் ஐபிஎஸ்  ஆகியவர்களிடமிருந்து சில தகவல்களை கேட்டு திரையில் கதாபாத்திரமாகவே வாழ்ந்திருந்தார்.

3. மௌனம் பேசியதே படத்தில் சூர்யாவை ஜீன்ஸ் போட்டா சகுனி என ஒருவர் சொல்லுவார் அவர் உண்மையாலுமே சூர்யாவின் நெருங்கிய நண்பர் திரு செந்தில் அவர் எதர்ச்சியாக படபிடிப்பு தளத்திற்கு வந்தார் அப்பொழுது அமீர் அவரை பயன்படுத்திக் கொண்டார்.

4. பிதாமகன் திரைப்படத்தின் படபிடிப்பின் போது சூர்யாவின் கதாபாத்திரம் இறந்து சடங்குகள் செய்வது போல எடுக்கப்பட்ட காட்சிகள் எடுக்கப்பட்டன. இதை பார்த்த  வயதான பெண்கள் பலர் உண்மையாகவே சூர்யா இறந்துவிட்டார் என நினைத்து ஒப்பாரி வைத்து பாட்டு பாடி உள்ளனர்.

5. 10 வயது இருக்கும் பொழுது என்னவாக விரும்புகிறாய் என ஒருவர் கேட்க I want die என சிரித்தபடியே கூறிவிட்டு அதையே அப்படியே தரையில் செங்கள்ளாலும் எழுதினாராம்.