2006 ஆம் ஆண்டு சக்கர முத்து என்ற மலையாளத் திரைப்படத்தில் துணை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் லட்சுமி ராமகிருஷ்ணன் அதனைத் தொடர்ந்து 2008 ஆம் ஆண்டு கரு பழனியப்பனின் பிரிவோம் சந்திப்போம் என்ற திரைப்படத்தில் சினேகாவின் தாயாராக நடித்திருந்தார்.
இவர் நடித்த முதல் தமிழ் திரைப்படம் தான் பிரிவோம் சந்திப்போம் பின்பு 2008 ஆம் ஆண்டு பொய் சொல்ல போறோம், எல்லாம் அவன் செயல் ஆகிய திரைப்படங்களிலும் நடித்திருந்தார், அதேபோல் 2009ம் ஆண்டு ஈரம், நாடோடிகள் சிரித்தால் ரசிப்பேன், வேட்டைக்காரன், ஆதவன் ஆகிய திரைப்படங்களில் துணை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
அதன்பிறகு 2010 ஆம் ஆண்டு விண்ணைத்தாண்டி வருவாயா, ராவணன், நான் மகான் அல்ல, பாஸ் என்ற பாஸ்கரன், கனிமொழி என பல திரைப்படங்களில் நடித்து வந்தார்.
பின்பு ஜீ தொலைக்காட்சியில் சொல்வதெல்லாம் உண்மை என்ற ரியாலிட்டி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி பிரபலமடைந்தார், அதுமட்டுமில்லாமல் 25க்கும் மேற்பட்ட தொலைக்காட்சி விளம்பரங்களில் நடித்துள்ளார், இந்த நிலையில் இவரின் மகள் புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகின்றன.
இதை பார்த்த ரசிகர்கள் லட்சுமி ராமகிருஷ்ணனுக்கு இவ்வளவு அழகான மகளா என வாய் பிளக்கிறார்கள்.