சொப்பன சுந்தரி படம் ரசிகர்களை மகிழ்வித்தா.? இல்லையா.? அனல் பறக்க வெளிவந்த twitter விமர்சனம்

sobana-sundari
sobana-sundari

தமிழ் சினிமாவில் இன்று முன்னணி நடிகையாக ஓடிக் கொண்டிருப்பவர் ஐஸ்வர்யா ராஜேஷ். இவர் ஆரம்பத்தில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து பின் படிப்படியாக ஹீரோயின் என்ற அந்தஸ்தை பெற்றார் தற்பொழுது இவர் ஹீரோயின்னாக பல்வேறு ஹிட் படங்களை கொடுத்து வந்தாலும் குணச்சிதர கதாபாத்திரங்களில் நடிப்பதால் இவருக்கான பட வாய்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமே இருக்கிறது.

இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த டிரைவர் ஜமுனா, ரன் பேபி ரன் போன்ற இரண்டு  படங்கள் சுமாரான வெற்றியை பெற்றதை தொடர்ந்து ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் உருவாகிய உள்ள திரைப்படம் தான் “சொப்பன சுந்தரி”.. இந்த படத்தை எஸ்.ஜி சார்லஸ் என்பவர் இயக்கி உள்ளார் படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் உடன் இணைந்து லட்சுமி பிரியா, தீபா, ரெடின் கிங்ஸ்லி, கருணாகரன் என பல முன்னணி நடிகர், நடிகைகள் நடித்திருந்தனர்.

இந்த படம் இன்று காலை திரையரங்குகளில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது உலகம் முழுவதும் சுமார் 600 க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. சொப்பன சுந்தரி படம் முழுக்க முழுக்க டார்கா காமெடி ஜானகரில் இருப்பதால் ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது தற்பொழுது உனக்கு சுந்தரி படத்தின் ட்விட்டர் விமர்சனம் நமக்கு கிடைத்துள்ளது அது குறித்து விளாவாரியாக பார்க்கலாம்..

படத்தை பார்த்த ஒருவர் கூறியுள்ளது.. சொப்பன சுந்தரி அருமையான படம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது எப்படி இதுபோன்று தொடர்ச்சியாக சிறந்த கதையம்சம் கொண்ட படங்களாக நீங்கள் தேர்ந்தெடுத்த நடிக்கிறீர்கள் என வியப்புடன் கேள்வி எழுப்பி ஐஸ்வர்யா ராஜேஷுக்கு பாராட்டுகளை தெரிவித்துள்ளார்.

மற்றொரு பதிவில்.. ஐஸ்வர்யா ராஜேஷின் ஸ்கிரிப்ட் தேர்வை பாராட்ட வேண்டும் காரை யாரு வச்சிருக்கா அல்லது கார் யாருடையது என்கின்ற சிம்பிளான ஒன் லைன் ஸ்டோரியை  நன்றாக வைத்து படம் உருவாகி உள்ளது ஐஸ்வர்யா ராஜேஷ், லட்சுமி பிரியா மற்றும் கருணாகரனின் நேர்த்தியான நடிப்பு இந்த படத்திற்கு பலமாக இருப்பதாக கூறி இருக்கிறார்.

மற்றொரு பதிவில் இந்த படம் முழுக்க முழுக்க நகைச்சுவை கதாபாத்திரங்களை வைத்து வேடிக்கையாக டைம் பாஸ் செய்துள்ளனர் முதல் பாதி பிடித்திருக்கிறது இரண்டாம் பாதியில் வழக்கம் போல் இருக்கிறது என கூறி இருக்கிறார்.