தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் சூர்யா. தமிழ் சினிமா ஆரம்பத்தில் காதல் அதன்பின் ஆக்சன் திரைப் படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வெற்றி கண்டு வந்த இவர் சமீபகாலமாக சமூக அக்கரை உள்ள படங்களில் நடித்து அசத்துகிறார் அப்படி அண்மையில் இவர் நடிப்பில் வெளியான ஜெய்பீம், சூரரைப்போற்று ஆகிய திரைப்படங்களை..
தொடர்ந்து இப்போ இவர் நடிப்பில் வெளியான எதற்கும் துணிந்தவன். இரண்டு வருடங்கள் கழித்து ஒரு வழியாக திரையரங்கில் சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் திரைப்படம் தான் வெளியானது. இத்திரைப்படமும் சமூக அக்கரை உள்ள திரைப்படமாக இருந்ததால் மக்கள் மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்று வசூலில் நடத்தி வருகிறது.
ஆனால் அண்மையில் வெளி வந்த அஜித்தின் வலிமை திரைப்படத்தின் வசூலை விட இது கம்மி என்பது குறிப்பிடத்தக்கது. சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் திரைப்படம் எதிர்பார்த்த அளவிற்கு வசூல் பெறவில்லை என்றாலும் இது ஓகே என கூறுகின்றனர் இப்படி இருக்கின்ற நிலையில் எதற்கும் துணிந்தவன் பட வில்லன் வினய்.
இதுவரை சூர்யாவின் திரைப்படமான எதற்கும் துணிந்தவன் திரைப்படம் 175 கோடி வசூல் செய்ததாக வெளியிட்டுள்ளார். இதை அறிந்த சினிமா பிரபலங்கள் ரசிகர்கள் பலரும் அதிர்ச்சி ஆகினர்.காரணம் எதிர்பார்த்த அளவிற்கு வசூல் பெறவில்லை என சொல்லிவிட்டு இப்போது 175 கோடியைப் வசூல் செய்தது என பலரும் மண்டையை பிய்த்துக் கொள்ள வைத்து விட்டது.
சினிமா வட்டாரங்கள் முன்பு இதுபற்றி விசாரித்த பொழுது இதுவரை எதற்கும் துணிந்தவன் திரைப்படம் 80 கோடிக்கு மேல் வசூல் செய்ததாக தகவல்கள் வெளிவருகின்றன. படக்குழு இதுவரை உண்மையான வசூலை குறிப்பிடாமல் இருப்பதால் ஆளுக்காள் ஒன்னு ஒன்னு சொல்லுகிறார்கள்.