“விக்ரம்” திரைப்படத்தின் கிளைமாக்ஸ் காட்சிகளுக்கு மட்டுமே இவ்வளவு நாள் ஷூட்டிங்கா.? ஆக்சன் சீன்கள் வேற லெவலில் இருக்கும் போல..

vikram-movie-
vikram-movie-

80 90 காலகட்டங்களில் இருந்து தற்போது வரை சினிமா உலகில் சிறப்பாக ஜொலித்து வரும் நடிகர் உலகநாயகன் கமலஹாசன். இவர் எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அதில் முழு ஈடுபாட்டுடன் இறங்கி  பின்னி பெடலெடுத்து நடித்து அசத்தியிருப்பார். அந்த வகையில் திரையுலகில் நடிகர் இயக்குனர், பாடகர், தயாரிப்பாளர் போன்ற பன்முகம் கொண்டவர் ஆவார்.

மேலும் சினிமா உலகை தவிர்த்து அரசியல் சின்னத்திரை தொகுப்பாளர் போன்ற அனைத்திலும் முழு ஈடுபாட்டுடன் தன்னை  ஈடுபடுத்திக் கொண்டு வருகிறார்.  இப்படி அனைத்திலும் கவனம் செலுத்தி வருவதால் சினிமா உலகில் சில வருடங்களாக இவரது படங்கள் ஏதும் பெரிதும் வெளிவரவில்லை.

அதனை அடுத்து இவர் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் விக்ரம் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.  இந்த படத்தில் கமலுடன் இணைந்து விஜய் சேதுபதி, பகத் பாசில், ஷிவானி நாராயணன், மைனா நந்தினி, வீஜே மகேஸ்வரி போன்ற பல பிரபலங்கள் நடித்து வருகின்றனர். இதனிடையில் விருவிருப்பாக இப்படத்தின் படப்பிடிப்பு எடுக்கப்பட்டு வரும்.

நிலையில் இந்த படம் குறித்து ஒரு தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அந்த வகையில் விஜய் நடிப்பில் வெளிவந்த மாஸ்டர் திரைப்படத்தில் விஜய் மற்றும் விஜய்சேதுபதி இடம்பெறும் கிளைமேக்ஸ் காட்சிகள் செம்ம மாசாக அமைந்தன. அதேபோல் தற்போது விக்ரம் திரைப்படத்திலும் கமல் மற்றும் விஜய் சேதுபதி  இணைந்து நடிக்கும்.

ஆக்ஷன் காட்சிகள் சுமார் 15 நாட்களாக எடுக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. அந்த காட்சிகள் முழுவதும் நேற்றுடன் முடிவடைந்துள்ளது என கூறப்படுகின்றன. இது நிலையில் மாஸ்டர் படத்தைவிட விக்ரம் படத்தில் கிளைமேக்ஸ் காட்சி சிறப்பாக இருக்கும் என ரசிகர்கள் பலரும் ஆவலாக எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.