2020 இல் மட்டும் இத்தனை சோகங்களா.! கண்களில் கண்ணீரை வரவழைத்த சம்பவங்கள்.!

இந்த வருடம் மிகவும் மக்களுக்கு பிடிக்காத வருடமாக மட்டும் அமையாமல் சினிமாவில் உள்ள பல பிரபலங்களை நாம் இழந்துவிட்டோம் அந்த வகையில் பிரபலமான நடிகர்கள், நடிகைகள் இழந்தவர்களை பற்றி நாம் பார்ப்போம்.

உலகமெங்கும் கோடிக்கணக்கான ரசிகர்களை சேர்த்து வைத்திருந்தவர் தான் பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் இவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார் அவரது இழப்பு வெள்ளித்திரைக்கு ஒரு நஷ்டம் ஏற்பட்டுள்ளது என்று தான் கூற வேண்டும்.

அடுத்ததாக சீரியல் நடிகை சித்ரா இவர் பாண்டியன் ஸ்டோர் சீரியலில் நடித்து வரும் பொழுது ரசிகர்களிடையே பட்டிதொட்டி எங்கும் புகழ் பெற்று விளங்கிவந்த இவர் தற்கொலை செய்து கொண்டார் இவரது இழப்பை தற்போது வரை தாங்கமுடியாமல் சினிமா பிரபலங்கள் தவித்து வருகிறார்கள்.

சிரஞ்சீவி சார்ஜா; கன்னட சினிமாவின் புகழ் பெற்ற இளம் நடிகரான இவர்  மாரடைப்பால் மறந்து விட்டார் ஆனால் இவருக்கு திருமணமாகி முதல் குழந்தை கர்ப்பத்தில் இருக்கும் பொழுது உலகை விட்டு மறைந்து விட்டார்.

ரிஷி கபூர்; பாலிவுட்டில் அதிகமான ரசிகர்களை சேர்த்து வைத்திருக்கும் நடிகர்களில் ஒருவர் தான் இவர் ரத்த புற்று நோயால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

சுஷாந்த் சிங் ராஜ்புட்; பாலிவுட்டில் கதாநாயகனாக நடித்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடத்தைப் பிடித்த இவர் ஜூன் 14 தேதி தனது படுக்கை அறையில் இருந்து தற்கொலை செய்து கொண்டார்.

இர்ஃபான் கான்

கைதேர்ந்த கலைஞரான இவர் உடல் நலக்குறைவால் கடந்த ஏப்ரல் மாதம் சினிமா உலகை விட்டு மறைந்தார்.

திவ்யா பட்னாகர்; இவர் கடந்த டிசம்பர் 7ஆம் தேதி கொரோனா வைரஸ் தொற்று காரணமாக சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

வாஜித் கான்; பாலிவுட்டில் பல ஹிட் திரைப்படங்கள் கொடுத்த தயாரிப்பாளருமான இயக்குனருமான இவர் கடந்த ஜூன் மாதம் காலமானார்.

சரோஜ் கான்; இவர் மாரடைப்பால் கடந்த ஜூலை 3 ஆம் தேதி காலமானார் இவர் ஒரு நடன இயக்குனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்த தகவல்கள் தற்பொழுது ரசிகர்கள் மத்தில் வைரலாகி வருகிறது.