ஜகமே தந்திரம் திரைப்படத்தில் இத்தனை பாடல்களா.?அடேங்கப்பா கார்த்திக் சுப்புராஜ் வேற லெவல் தான்.

dhanush3
dhanush3

கடந்த சில வருடங்களாக தமிழ் சினிமாவில் வசூல் மன்னனாக திகழ்ந்து வருபவர் தனுஷ் இவரது திரைப்படங்கள் கடந்த சில வருடங்களாக நல்ல வரவேற்ப்பை பெறுவது மட்டுமல்லாமல் விமர்சன ரீதியாகவும் நல்ல விமர்சனத்தை பெற்று வசூல் ரீதியாக அதிகம் வசூல் செய்து சாதனை படைத்து வருகிறது அந்த வகையில் கூற வேண்டும் என்றால் இவரது நடிப்பில் வெளியான அசுரன் திரைப்படம் பல சாதனைகளை படைத்து வசூலில் அதிகம் வசூல் செய்தது.

அதனைத் தொடர்ந்து தனுஷின் கர்ணன் திரைப்படம் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்ப்பை பெற்றது ஆனால் ரசிகர்களிடம் கலவையான விமர்சனத்தை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது அதனைத் தொடர்ந்து தனுஷ் நடிப்பில் ஒரு சில திரைப்படங்கள் உருவாகி வருகிறது.

தனுஷ் நடிப்பில் ஜகமே தந்திரம் என்ற திரைப்படம் ரிலீசுக்கு தயாராகியுள்ளது ரஜினியின் பேட்ட திரைப்படத்தை இயக்கிய கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவான இந்த திரைப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன்  இசையமைத்து உள்ளார் மேலும் இந்த திரைப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக ஐஸ்வர்யா லட்சுமி நடித்துள்ளார் இதனையடுத்து சந்தோஷ் நாராயணன் இசையில் அமைந்த ரகிட ரகிட மற்றும் புஜ்ஜி பாடல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்த திரைப்படத்தின் பாடல்களை பற்றி தற்போது ஒரு தகவல் கிடைத்துள்ளது அதில் ஜகமே தந்திரம் திரைப்படத்தில் மொத்தம் எட்டு பாடல்கள் இருப்பதாகவும் அவை அனைத்தும் அடுத்தடுத்து படக்குழுவினர்கள் வெளியிட திட்டமிட்டுள்ளார்கள் எனவும் தகவல் கிடைத்துள்ளது.

dhanush7
dhanush7

இதனை தொடர்ந்து இன்று காலை சரியாக 11 மணியளவில் இந்த திரைப்படத்தில் இருந்து நேத்து என்ற பாடல் வெளியாகி ரசிகர்களிடையே தற்பொழுது வைரலாகி வருகிறது என்பது பலருக்கும் தெரிந்தது தான் இதனை அடுத்து தொடர்ச்சியாக பாடல்கள் வெளியானால் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்து விடும் என பல சினிமா பிரபலங்களும் கூறி வருகிறார்கள்.