திரையரங்கில் வலிமை திரைப்படத்திற்கு மட்டும் இத்தனை காட்சிகளா.! கவலையில் முன்னணி நடிகர்களின் ரசிகர்கள்

valimai
valimai

சினிமாவைப் பொறுத்தவரை முன்னணி நடிகர்களின் திரைப்படம் வெளியாகிறது என்றாலே சிறப்புக் காட்சிகள் ரசிகர்களுக்காக  ஒளிபரப்பப்படும் திரையரங்கில். அந்த வகையில் சிம்பு ரசிகர்கள் மாநாடு திரைப்படத்தின் சிறப்பு காட்சிக்காக காத்து இருந்தார்கள் ஆனால் நள்ளிரவு முதல் காத்திருந்த சிம்பு ரசிகர்களுக்கு ஏமாற்றம் தான் மிச்சம்.

ஏனென்றால்  சிம்பு ரசிகர்கள் எதிர்பார்த்த மாதிரி மாநாடு திரைப்படத்திற்கு சிறப்பு காட்சிகள் கொடுக்கவில்லை. தமிழ் சினிமாவில் மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை கொண்டவர் அஜித் குமார்.  இவர் நடிப்பில் வினோத் இயக்கத்தில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவி வரும் திரைப்படம்தான் வலிமை. இந்த திரைப்படம் ஜனவரியில் திரையரங்கில் வர இருக்கிறது.

திரைப்படம் வெளியான முதல் நாளே வசூலில் சாதனை படைக்க படக்குழு முடிவு செய்துள்ளது. நேர்கொண்ட பார்வை திரைப்படத்தை போனிகபூர் தான் தயாரித்து இருந்தார் அந்த திரைப்படத்தை தொடர்ந்து வலிமை திரைப்படத்தையும் போனிகபூர் தயாரித்துள்ளார். இந்த திரைப்படத்தில் அஜித் கார்சேசிங் காட்சிகளில் நடித்துள்ளார் என கூறப்படுகிறது அதுமட்டுமில்லாமல் போலீஸ் அதிகாரியாகவும் நடித்துள்ளார் என தகவல் கிடைத்துள்ளது.

மேலும் அஜித்தின் வலிமை திரைப்படத்தில் பாலிவுட் நடிகை ஹேமா குரோஷி நடித்துள்ளார் மேலும் வில்லனாக தெலுங்கு நடிகர் கார்த்திகேயா, காமெடி நடிகர் யோகிபாபு, புகழ் ஆகியோர்கள் நடித்துள்ளார்கள். யுவன் சங்கர் ராஜா இசையில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்திற்கு நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார்.

படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் வலிமை திரைப்படத்திலிருந்து நாங்க வேற மாதிரி என்ற பாடல் வெளியாகி ரசிகர்களிடையே வைரல் ஆனது. அதேபோல் இரண்டாவது பாடலாக அம்மா சாங் வெளியாகி வைரல் ஆனது.

ஏற்கனவே தயாரிப்பாளர்கள் கூறியபோது ஜனவரி மாதம் பொங்கல் தினத்தை முன்னிட்டு ரிலீஸ் ஆக இருக்கிறது. இந்த மாதம் முழுவதும் வலிமை கொண்டாட்டமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தநிலையில் இந்த திரைப்படத்தின் திரையரங்கு வெளியீட்டு உரிமையை விற்றுள்ளதை தற்போது அறிவித்துள்ளது.

அந்த வகையில் சென்னை பிக்சர் செங்கல்பட்டு ஸ்கை மேன் தயாரிப்பு, கோயமுத்தூர் எஸ் எஸ் ஐ பி, மதுரையில் கோபுரம் பிலிம்ஸ் ,திருச்சி ஸ்ரீ துர்க்காம்பிகை பிலிம்ஸ், சேலம் ஸ்ரீ குமரன் பிலிம்ஸ், என பல தயாரிப்பு நிறுவனங்களுக்கு வலிமை திரைப்படத்தை கொடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார்கள். வலிமை திரைப் படத்தின் ரிலீஸுக்கு முன்னே வலிமை கொண்டாட்டம் ஆரம்பித்துவிட்டது.

அந்த வகையில் சென்னையில் பிரபல திரையரங்கு ஆன காசி திரையரங்கில் மாலை ஒளிபரப்பப்பட்ட அனைத்து காட்சிகளுக்கு இடையே வலிமை முதல் மோஷன் போஸ்டரை ஒளிபரப்பி உள்ளார்கள். அந்த வகையில் வலிமை முதல் நாள் வசூலில் ரெக்கார்ட் பிரேக் செய்ய வேண்டும் என்பதற்காக படக்குழு திட்டமிட்டுள்ளது.

இந்த நிலையில் வலிமை படகுழு முதல் நாள் வசூலில் ரெக்கார்ட் பிரேக் செய்ய வேண்டும் என்பதற்காக நள்ளிரவு ஒரு மணி காட்சிக்கு படக்குழு திட்டமிட்டுள்ளது அதனால் அன்று 8 காட்சிகள் திரையிட வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது. அதனால் முதல் நாள் பாக்ஸ் ஆபிஸ் வசூலில் சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால் சிம்பு நடித்த மாநாடு திரைப்படத்திற்கு சிறப்பு காட்சிக்கு உத்தரவு கிடைக்காததால் தமிழகத்தில் உள்ள அனைத்து திரையரங்குகளிலும் 8:00 மணி காட்சிதான் வெளியிட்டார்கள் அதனால் காத்திருந்த ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றம் தான் மிஞ்சியது. வலிமை திரைப்படத்திற்கு மற்றும் நள்ளிரவு காட்சி  எப்படி சாத்தியம் என ரசிகர்கள் ஆதங்கப்பட்டு வருகிறார்கள்.