“குக் வித் கோமாளி புகழ்” கையில் இத்தனை படங்களா.? ஆச்சரியப்படும் மற்ற காமெடி நடிகர்கள்.

pukazh
pukazh

திறமை இருப்பவர்கள் எப்பொழுது வேண்டுமானாலும் சினிமா உலகில் வெற்றி கொடியை நாட்ட முடியும் என்பதை தற்பொழுதும் உணர்த்தி உள்ளார் குக் வித் கோமாளி புகழ். முதலில் சின்னத்திரை பக்கம் அடியெடுத்து வைத்து பின் தனது திறமையின் மூலம் ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கி கொண்டு தற்போது வெள்ளித்திரையில் கால் பதித்துள்ளார்.

தொடர்ந்து நல்ல வரவேற்பு கிடைத்து வருவதால் டாப் நடிகர்களின் படங்களில் நடிக்க வைக்க பல தயாரிப்பாளர்களும்,  இயக்குனர்களும் ஆசைப்படுகின்றனர். அந்த வகையில் நடிகர் புகழ் தற்போது  டாப் நடிகர்களுடன் கை கொடுத்து நடித்து வருகிறார். அந்த லிஸ்டை சமீபத்தில் அவரே சொல்லி உள்ளார் யார் யாருடன் நடிக்கிறார் என்பதை தற்போது விலாவாரியாக பார்ப்போம்.

அஜீத்துடன் கடைசியாக வலிமை திரைப்படத்தில் நடித்த அந்த படம் வெளிவந்து கோலாகலமாக ஓடிக்கொண்டிருக்கிறது அதனைத் தொடர்ந்து சூர்யாவுடன் எதற்கும் துணிந்தவன், அருண் விஜய் உடன் யானை, சந்தானத்தின் ஏஜென்ட் கண்ணாயிரம், விஜய்சேதுபதியின் 46, பல்வேறு படங்களில் பிஸியாக கமிட்டாகி நடித்து வருகிறார்.

மேலும் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட புகழ் தனது அடுத்ததாக சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஒரு படத்தில் கமிட்டாகி உள்ளேன் என்று கூறியுள்ளார். அப்படி பார்க்கையில் ரஜினியின் 169 திரைப்படம் அல்லது விஜய்யின் பீஸ்ட், தனுஷின் திருச்சிற்றம்பலம் ஆகிய 3 படங்களில் ஏதோ ஒரு படத்தில் நடிகர் புகழ் நடிகர் என்பது குறிப்பிடதக்கது.

சிள்ளித் திரையில் பார்த்து ஓடிக்கொண்டிருந்த புகழ் தற்போது யோகிபாபு லெவலுக்கு அசுர வளர்ச்சியை எட்டி தொடர்ந்து டாப் நடிகர்கள் படங்களில் நடித்து வருவதால் அவரது சினிமா பயணம் நீண்டுகொண்டே செல்கிறது என்பது தெளிவாகத் தெரிகிறது.