குஷியில் தனுஷ்.? D50 திரைப்படத்தில் மொத்தம் இத்தனை ஹீரோயின்களா.?

dhanush
dhanush

Dhanush : தமிழ் சினிமாவில் இன்று பிஸியான ஹீரோவாக வருபவர் தனுஷ். இவர் கடைசியாக நடித்த வாத்தி திரைப்படம்  நல்ல வரவேற்பை பெற்று  100 கோடிக்கு மேல் வசூலித்து பிரம்மாண்ட வெற்றியை பதிவு செய்தது அதனை தொடர்ந்து இன்னொரு வெற்றி படத்தை கொடுக்க இயக்குனர் அருண் மாதேஸ்வரனுடன் கூட்டணி அமைத்து கேப்டன் மில்லர் திரைப்படத்தில் நடித்துள்ளார்.

இந்த படத்தின் டீசர் அண்மையில் தனுஷ் பிறந்த நாளை முன்னிட்டு வெளியானது அதில் பிரியங்கா அருள் மோகன், சந்திப் கிஷன், ஜான் கொக்கின் மற்றும் பலர் நடித்திருந்தனர். படம் மிகப்பெரிய ஆக்ஷன் படமாக இருக்கும் என சொல்லப்படுகிறது. கேப்டன் மில்லர் படத்தின் சூட்டிங் அனைத்தும்  முடிந்ததை தொடர்வது.

தனுஷ் தனது இரு மகன்கள் உடன் திருப்பதி கோயிலுக்கு சென்று மொட்டை அடித்து வந்தார் அதன் புகைப்படங்கள் பெரிய அளவில் பேசப்பட்டது. சிறிதும் ஓய்வெடுக்காமல் தனுஷ் தனது அடுத்த படமான 50 வது திரைப்படத்தில் நடிக்க களம் இறங்கி விட்டார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க ஏ ஆர் ரகுமான் இந்த படத்திற்கு இசையமைக்க   உள்ளார்.

இந்த நிலையில் தனுஷ் நடிக்கும் 50 வது திரைப்படத்திற்கான நடிகர் நடிகைகள் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர் அதன்படி இந்த படத்தில் 3 ஹீரோயின்கள் இருக்க வாய்ப்பு இருக்கிறது அந்த நடிகைகளின் பெயர்களும் தற்பொழுது கசிந்துள்ளது

துஷாரா விஜயின், அனிகா, அபர்ணா பால முரளி போன்றவர்கள் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. அதற்கான அதிகாரப்பூர்வ தகவல்களில் இன்னும் தெளிவாகவில்லை. ஆனால்  இந்த தகவல் சோசியல் மீடியா பக்கத்தில் தற்பொழுது வேகமாக பரவி வருகிறது.