தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் தொடர்ந்து ஏராளமான திரைப்படங்கள் வெளியாக வருகிறது. மேலும் வயதானாலும் கூட தொடர்ந்து சுறுசுறுப்பாக நடித்து வருகிறார் அந்த வகையில் தற்பொழுது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் தான் ஜெய்லர்.
இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று வெளியாகி விரலானது மேலும் சூட்டிங் தொடங்கப்பட்டதை அறிவித்தார்கள். இப்படிப்பட்ட நிலையில் தற்பொழுது ஜெயிலர் திரைப்படத்திற்காக ஜெயில் செட் அமைக்கப்பட்டு படப்பிடிப்பு மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அங்கு இயக்குனர் நெல்சன் உடன் ஸ்டண்ட் சிவா எடுத்துக் கொண்ட புகைப்படங்களும் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
இப்படிப்பட்ட நிலையில் தற்போது இணையதள வாசிகள் ஜெயிலர் என்ற தலைப்பில் இதற்கு முன்பு வெளியான திரைப்படங்களின் போஸ்டரை இணையதளத்தில் வைரலாக்கி வருகின்றனர். அதாவது முதன்முறையாக மலையாளத்தில் ஜெயிலர் என்ற தலைப்பில் ஒரு திரைப்படம் வெளியாகி இருந்தது அதேபோல் மேலும் ஒரு வெளிநாட்டை சேர்ந்த திரைப்படம் ஜெய்லர் தலைப்பில் உருவாகி இருந்தது.
இந்த படங்களின் போஸ்டர் தற்பொழுது சோசியல் மீடியாவில் வைரல் ஆனதால் பெரும் சர்ச்சை ஏற்படுத்தி உள்ளது.இது ஒரு புறம் இருக்க ஜெயிலர் திரைப்படத்தின் படப்பிடிப்பு நேற்று துவங்கப்பட்டுள்ள நிலையில் அனைவரும் நடிகர் ரஜினிகாந்தின் போஸ்டரை பார்த்து பாராட்டி வருகிறார்கள்.
அந்த வகையில் தனுஷ் கூட wow!! பதிவிட்டிருந்தார் மேலும் சிவகார்த்திகேயன் என தொடர்ந்து பல முன்னணி நடிகர்களும் ஜெயிலர் படத்தில் ரஜினியின் கெட்டப்பை பார்த்து பல கேப்ஷனுடன் தங்களுடைய டுவிட்டர் பதிவிட்டு வருகிறார்கள். மேலும் ரஜினி நடிப்பில் சமீப காலங்களாக வெளிவந்த திரைப்படங்கள் கலவை விமர்சனத்தை பெற்று வந்த நிலையில் ஜெயிலர் திரைப்படம் அவரை வெற்றி பாதைக்கு கொண்டு செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.