சூர்யா 42 படத்தில் இத்தனை காமெடி பிரபலங்களா.! வெளிவந்த லிஸ்ட் இதோ..

surya-42
surya-42

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகர் சூர்யா தொடர்ந்து ஏராளமான திரைப்படங்கள் நடித்து வருகிறார்.மேலும் இவர் நடிப்பில் வெளிவரும் திரைப்படங்களும் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பினை பெற்று வருகிறது. அந்த வகையில் கடைசியாக உலக நாயகன் கமலஹாசன் அவர்களின் நடிப்பில் வெளிவந்த விக்ரம் திரைப்படத்தில் கிளைமாக்ஸ் காட்சிகள் கொடூர வின்னாக ரோலக்ஸ் கதாபாத்திரத்தில் நடித்து மிரட்டி இருந்தார்.

இந்த திரைப்படம் இவருக்கு மிகப்பெரிய வெற்றினை தந்தது இதற்கு முன்பு சூர்யா நடிப்பில் வெளிவந்த சில திரைப்படங்கள் தொடர்ந்து தோல்வியை பெற்று வந்ததால் வெற்றி திரைப்படங்கள் தர வேண்டும் என்ற நிலைமைக்கு தள்ளப்பட்டார் இந்த நேரத்தில் சுதா கோங்கரா  இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளிவந்த சூரரைப் போற்று திரைப்படம் இவருக்கு திருப்புமுனையாக அமைந்தது இந்த திரைப்படத்தின் மூலம் தேசிய விருதையும் பெற்றார்.

இப்படிப்பட்ட நிலையில் தற்பொழுது நடிகர் சூர்யா வணங்கான், வாடிவாசல், மற்றும் சூரியா 42 ஆகிய திரைப்படங்களில் நடித்து மிகவும் பிசியாக இருந்து வருகிறார் மேலும் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும் இவருடைய 42 ஆவது திரைப்படத்தின் பூஜை சமீபத்தில் நடைபெற்றது மேலும் படப்பிடிப்புகளும் தொடங்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த திரைப்படத்தில் நடிகர் ஜோடியாக சூர்யாவுக்கு ஜோடியாக பாலிவுட் முன்னணி நடிகை திஷா பதானி நடிக்க உள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளது.மேலும் தற்பொழுது சூரியன் 42 திரைப்படத்தில் எந்தெந்த பிரபலங்கள் நடக்க இருக்கிறார்கள் என்பதை பற்றிய தகவல் தற்பொழுது வெளியாகி உள்ளது. அதாவது ஆனந்த்ராஜ், கோவை சரளா, யோகி பாபு ரெடின் கிங்ஸ்லி ஆகியோர்கள் முதல் கட்ட படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளார்கள் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இவ்வாறு இவர்கள் அனைவருமே காமெடியை சம்பந்தப்பட்ட நடிகர் இவ்வாறு சூர்யா 42 திரைப்படத்தில் காமெடி காட்சிகள் அதிகமாக இடம்பெறும் என தெரிய வருகிறது மேலும் இதனை தொடர்ந்து மேலும் யார் யார் நடிக்கிறார்கள் என்ற பட்டியல் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.