சூர்யா இதுவரை நடித்த படத்திலேயே.. எனக்கு பிடித்த படம் இதுதான் – நடிகர் கார்த்தி பதில்.!

surya and bala
surya and bala

தமிழ் சினிமா உலகில் வாரிசு நடிகர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே இருக்கிறது இருப்பினும் அவர்கள் தனது திறமையை வெளிக்காட்டினால் மட்டுமே நிரந்தர இடத்தை பிடிக்க முடியும். அந்த வகையில் சிவகுமாரின் மகன்களான சூர்யா மற்றும் கார்த்தி இருவரும் நல்ல திரை கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வெற்றி படங்களை கொடுத்து முன்னணி நடிகர்களாக ஜொலிக்கின்றனர்.

சூர்யா நடிப்பில் கடைசியாக வெளியான எதற்கும் துணிந்தவன் படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது அதேபோல கார்த்தி நடிப்பில் முத்தையா இயக்கத்தில் உருவான விருமன் திரைப்படம் கடந்த வெள்ளிக்கிழமை திரையரங்குகளில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த படத்தில் கார்த்தி உடன் கைகோர்த்து சரண்யா பொன்வண்ணன்.

மற்றும் மைனா நந்தினி, அதிதி சங்கர், சூரி, சிங்கம் புலி, பிரகாஷ் ராஜ், மனோஜ் மற்றும் பல முன்னணி நடிகர் நடிகைகள் நடித்து அசதி இருந்தனர். இந்த படம் தொடர்ந்து நல்ல வரவேற்பை பெற்று வருவதால் நல்ல வசூலை கண்டு வருகிறது. இதனால் படக்குழு செம்ம சந்தோஷத்தில் இருக்கிறது.

குறிப்பாக இந்த படத்தை தயாரித்த நடிகர் சூர்யா உற்சாகத்தில் இருக்கிறாராம். இப்படி இருக்கின்ற நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் நடிகர் கார்த்தி அண்ணன் சூர்யா குறித்து சில கேள்விகளுக்கு பதில் அளித்துள்ளார். சூர்யா நடித்த படங்களில் உங்களுக்கு பிடித்த படம் என்னவென்று கேட்டுள்ளனர் அதற்கு கார்த்தி சூர்யா பல வெற்றி திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

surya
surya

அதில் எனக்கு பிடித்த திரைப்படம் என்றால் பாலா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவான பிதாமகன் படம் தான் பிதாமகன் படத்தில் சூர்யாவின் கதாபாத்திரம் அப்படி இருக்கும் அதுதான் எனக்கு சூர்யா நடித்த படங்களிலேயே ரொம்பவும் பிடித்த படம் என ஓப்பனாக பேசினார் இச்செய்தி தற்போது இணையதள பக்கத்தில் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.