தென்னிந்திய சினிமாவில் 90ஸ் காலகட்டத்தில் முன்னணி நடிகையாக கொடி கட்டி பறந்தவர் நடிகை சினேகா. இவர் முன்னணி நடிகையாக வளம் வந்து கொண்டிருக்கும் போது பல ரசிகர்களின் கனவு கன்னியாகவும் இருந்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமல்லாமல் இவருடைய ரசிகர்கள் அன்பாக புன்னகை அரசி என்றும் அழைத்துவன்தனர்.
இதனை தொடர்ந்து சினிமாவில் நடித்துக் கொண்டிருக்கும் போது நடிகை சினேகா நடிகர் பிரசன்னாவை காதலித்து 2012 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். பின்னர் திருமணத்திற்கு பிறகும் நடிப்பார் என்று எதிர்பார்த்த ரசிகர்களுக்கு ஏமாற்றம் தான கிடைத்தது. மற்ற நடிகைகளை போல இவரும் திருமணம் செய்து கொண்டு ஒரு அறிக்கையை வெளியிட்டிருந்தார் அதாவது இனிமேல் நான் சினிமாவில் நடிக்க போவதில்லை என்று கூறியிருந்தார்.
அதன் பிறகு இரு குழந்தைகள் பிறக்கவே தனது குடும்பத்துடன் சந்தோஷமாக இருந்து வந்த சினேகா மறுபடியும் சினிமாவில் நடித்த ரீ என்ட்ரி கொடுத்தார். ஆனால் சினிமாவில் இவருக்கு கதாநாயகிக்காண வாய்ப்பு கிடைக்கவில்லை அதற்கு பதிலாக தற்போது குணச்சித்திர ரோல்களிலும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு வருகிறார்.
தமிழ் தெலுங்கு நிகழ்ச்சிகளில் நடுவராக பணியாற்றி வரும் சினேகா சென்னை ஹைதராபாத் என்று பிஸியாக படங்களில் நடித்து வருகிறார் இந்த நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக பிரசன்னாவை சினேகா விவாகரத்து செய்ய போவதாக செய்திகள் ஒரு பக்கம் பரவியது.
இந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த சினேகா க்யூட்டான போட்டோ ஷூட் நடத்தி புகைப்படம் ஒன்றை இணையத்தில் வெளியிட்டுள்ளார். 41 வயதாகும் சினேகாவின் இந்த புகைப்படத்தை பார்த்து உங்களுக்கு இன்னும் வயசு ஆகல என்று ரசிகர்கள் வியந்து பார்க்கின்றனர்.
இதோ அந்த புகைப்படம்…