தமிழ் சினிமாவில் எப்படியோ ஒரு வழியாக தனக்கென ஒரு இடத்தை நிரந்தரமாக பிடித்து தற்பொழுது மிகவும் பிரபலமான நடிகையாக வலம் வரும் நடிகை சினேகா இவர் தமிழ் திரையுலகில் பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து மிகவும் புகழ்பெற்று விளங்கிய நடிகை என்றாலும் இவரும் பல நடிகைகளைப் போல் காதல் திருமணம் செய்து கொண்டார்.
இவர் பிரபல நடிகர் பிரசன்னாவை காதல் திருமணம் செய்து கொண்டு குழந்தைகளைப் பெற்ற பின் தமிழ் சினிமாவில் நடிக்கவே வரவில்லை.இறுதியாக இவரது நடிப்பில் பட்டாஸ் என்ற திரைப்படம் வெளியாகி இருந்தது இந்த திரைப்படத்தை அவரது ரசிகர்கள் கொண்டாடி வந்தார்கள் பட்டாஸ் திரைப்படத்தில் நடிகர் தனுஷுக்கு ஜோடியாக நடித்து மிகவும் புகழ்பெற்று விளங்கி விட்டார்.
இதனைத்தொடர்ந்து இவரது நடிப்பில் கூடிய சீக்கிரம் திரைப்படம் வெளியாகும் என ரசிகர்கள் பலரும் காத்துக் கொண்டிருந்த நிலையில் தற்பொழுது இவர் பிரபல இயக்குனருடன் ஜோடி சேர இருக்கிறார் என தகவல் கிடைத்துள்ளது ஆம் இயக்குனர் வெங்கட் பிரபுவும் இவரும் ஜோடியாக ஒரு திரைப்படத்தில் நடிக்க உள்ளார்களாம்.
அந்தத் திரைப்படத்திற்கு ஷாட் பூட் 3 என்று தலைப்பு வைத்துள்ளார்களாம் இந்நிலையில் இந்த தகவலை அறிந்த ரசிகர்கள் பலரும் சினேகா தமிழ் திரையுலகில் ரீ என்ட்ரி கொடுக்கிறார் எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சி என கூறி வருகிறார்கள்.
ஒரு சில ரசிகர்கள் சினேகா நடிக்க வந்தது மிகவும் பெரிய விஷயம்தான் குழந்தைகள் இருந்தும் மீண்டும் தமிழ்த் திரையுலகில் தனது நடிப்பை வெளிப்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் நடிக்க வருகிறார் இவர் நடிக்கும் திரைப்படம் மிகவும் நன்றாக கைகொடுக்கும் என இவரைப் பாராட்டி வாழ்த்துக்கள் தெரிவித்து வருகிறார்கள்.