தமிழ் சினிமாவில் எத்தனையோ நடிகர் மற்றும் நடிகைகள் திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வருகிறார்கள் அதிலும் ஒரு சில நடிகர் மற்றும் நடிகைகள் விவாகரத்து செய்துவிட்டு தனித்தனியாக தங்களின் வேலையை பார்த்து வருகிறார்கள். அப்படிதான் சமீப காலமாக திருமணமான நடிகர் நடிகைகள் விவாகரத்து செய்தி அடிக்கடி நாம் சமூக வலைதளத்தில் பார்த்து வருகிறோம்.
அந்த வகையில் சமீபத்தில் சமந்தா மற்றும் நாக சைதன்யா இருவரும் விவாகரத்து செய்ய இருப்பதாக தகவல் வெளியானது, இவர்களைத் தொடர்ந்து தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினி இருவரும் பிரிய போவதாக தகவல் கிடைத்தது இதனை தொடர்ந்து சானியா மிர்சா மற்றும் பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் சோயப் அலிக்கான் இருவரும் பிரிய இருப்பதாக தகவல் சமீபத்தில் பார்த்தோம்.
இப்படி பல பிரபலங்கள் ஒன்றாக வாழ்ந்து விட்டு பிரிந்து வரும் நிலையில் தமிழ் சினிமாவில் காதலித்து திருமணம் செய்து கொண்ட நடிகர் நடிகைகளின் லிஸ்டில் மிகவும் பிரபலமானவர்களில் ஒருவர் சினேகா மற்றும் பிரசன்னா இவர்கள் இருவரும் காதலித்து 2012 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்கள் இந்த தம்பதிகளுக்கு இரு பிள்ளைகள் இருக்கிறார்கள் இருவரும் திருமணத்திற்கு பிறகு மிகவும் சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார்கள்.
இவர்களின் ஜோடியை பார்த்தால் பல பிரபலங்களும் பொறாமைப்படுவார்கள் அந்த அளவு சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார்கள் இந்த நிலையில் சினேகா மற்றும் பிரசன்னா இருவரை பற்றியும் அதிர்ச்சியாகும் தகவல் ஒன்று சமூக வலைதளத்தில் வெளியாகி பரபரப்பு ஏற்படுத்தியது அதன்படி சினேகா மற்றும் பிரசன்னா விரைவில் விவாகரத்து செய்து கொள்ளப் போவதாக ஷாக்கிங் தகவல் வெளியானது.
இது மிகவும் வைரலாகியதைத் தொடர்ந்து இதனை கேள்விப்பட்ட சினேகா தன்னுடைய கணவருடன் ஒன்றாக இருக்கும் நெருக்கமான புகைப்படத்தை வெளியிட்டு வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதுமட்டுமில்லாமல் சினேகா பிரசன்னா இவ்வாறு பரவிய வதந்தியை யாரும் நம்ப வேண்டாம் எனவும் தகவல் தற்பொழுது வெளியாகி வைரல் ஆகி வருகிறது.