சினிமா உலகில் பல முன்னணி நடிகைகள் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி சிறப்பாக வலம் வந்து கொண்டிருக்கின்றனர். அப்படி சினிமா துறையில் தனது சிரிப்பின் மூலம் பல கோடி ரசிகர்களை கட்டி இழுத்துக்கொண்டு மட்டுமல்லாமல் சிறப்பாக பயணித்து வருகின்றவர் தான் சினேகா.
இவர் என்னவளே என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார். இப்படத்தினை தொடர்ந்து குடும்பங்களை கவரும் படியான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்ததன் மூலம் வெகு விரைவிலேயே முன்னணி நடிகர்கள் படங்களில் நடிக்க தொடங்கினார்.
அதன் மூலம் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு மார்க்கெட்டை உயர்த்திக் கொண்டு சிறப்பாக வலம் வந்தார் இப்படி பயணித்துக் பயணித்துக்கொண்டிருந்த இவர் 2012 ஆம் ஆண்டு நடிகர் பிரசன்னாவை திருமணம் செய்து கொண்டார். அதன் பின் இவர்கள் இருவரும் சிறப்பாக படங்களில் தோன்றி வந்தாலும் குடும்பத்தை ஒரு பக்கம் சிறப்பாக நடத்தி வந்தனர்.
இவர்கள் இருவருக்கும் 2015 ஆம் ஆண்டு விஹான் என்ற மகன் பிறந்தான். இதனை தொடர்ந்து அவருக்கு அதிர்ஷ்டம் அடித்தது என்று கூற வேண்டும். இவர் சினிமா உலகில் இரண்டாம் இனிங்ஸ் தொடங்க அவருக்கு நடிக்க வாய்ப்புகள் வந்தது. அதனை திறம்பட இயற்றி தற்போது சினிமா உலகில் அடுத்தகட்ட நிலைக்கு வந்தார்.
அந்த நிலையில் தற்போது இவருக்கு இரண்டாவதாக ஜனவரி 24ஆம் தேதி ஆத்யாந்தா என்ற பெண் குழந்தை பிறந்தது. தனது குழந்தைகளுடன் தற்போது சிறப்பாக வாழ்ந்து வருகின்றனர் .இந்த நிலையில் பிரசன்னாவின் பிறந்தநாளை முன்னிட்டு தனது மகள் மற்றும் மகனுடன் இருக்கும் புகைப்படங்கள் சிலவற்றை தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
அதிலும் குறிப்பாக தனது மகளுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு மீடிய உலகிற்கு அறிமுகப்படுத்தி உள்ளார். அத்தகைய புகைப்படம் தற்போது சமூக ஊடகத்தில் காட்டுத்தீ போல பரவி வருகிறது. இதோ அந்த புகைப்படம்.