தமிழ் சினிமா உலகில் வயதான நடிகர்கள் கூட படத்திற்காக கருப்பு கை அடித்துக் கொண்டு நடிக்கிறார்கள் ஆனால் இதிலிருந்து முற்றிலுமாக மாறுபட்டவர் நடிகர் அஜித்குமார் இவர் மங்காத்தா படத்தில் இருந்து இப்பொழுது வரை தனது படத்திற்காக தனது தலையில் டை அதிகமாக அடித்தது கிடையாது தனது வெள்ளை முடியுடன் படங்களில் நடித்து வருகிறார்.
அஜித் கடைசியாக நடித்த துணிவு படத்தில் கூட சால்டன் பேப்பர் லக்கில் தான் நடித்திருப்பார் அந்த படம் வெளிவந்து பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது இதனைத் தொடர்ந்து அவர் நடிக்க இருக்கும் விடாமுயற்சி மற்றும் அடுத்த படங்களில் கூட இவர் தனது வழக்கமான சால்ட் அண்ட் பேப்பர் லுக்கிலேயே நடிப்பார் என சொல்லப்படுகிறது.
இவருடைய சால்ட் அண்ட் பேப்பர் லுக் மங்காத்தா படத்தில் தான் பெரிய அளவு பேசப்பட்டது அந்த லுக்கு ரசிகர்களுக்கு பிடித்ததையும் தாண்டி நடிகர், நடிகைகளுக்குமே பிடித்திருந்தது இந்த நிலையில் அஜித்தின் மங்காத்தா லுக் குறித்து பேட்டி ஒன்றில் நடிகை சினேகா பேசிய உள்ளார்.
ஒரு பெரிய விஷயம் தான்.. எந்த ஒரு நடிகரும் இப்படியெல்லாம் வெள்ளை முடியோடு வயதான தோற்றத்தில் நடிக்க யோசிப்பார்கள் ஆனால் அஜித் மிகவும் போல்டாக அந்த கதாபாத்திரத்தில் நடித்திருப்பார் அஜித் வேற எந்த ஒரு நடிகர் மாதிரியும் நடிக்க மாட்டார்.
அவர் அவராகவே இருப்பதால் தான் இன்று இந்த அளவுக்கு மாஸ் ஹீரோவாக வளர்ந்திருக்கிறார் என சினேகா பெருமையாக பேசி உள்ளார். விஷயத்தை கேள்விப்பட்ட ரசிகர்கள் சினேகா சொன்னது முற்றிலும் உண்மை அஜித் வேற லெவல் எனக் கூறி இந்த செய்தியை பெரிய அளவில் சோசியல் மீடியா பக்கத்தில் பரப்பி வருகின்றனர்.