சினிமாவில் முன்னணி நடிகைகளாக வலம் வந்த பலர் திருமணத்துக்குப் பிறகு கதாநாயகிக்கு முக்கியத்துவம் தரும் திரைப்படங்களையும், சமூகத்திற்கு ஒரு நல்ல கருத்தை தரும் வகையில் அமையும் திரைப்படங்களையும் தேர்ந்தெடுத்து நடிப்பதில் மிகவும் ஆர்வம் உடையவர்களாக திகழ்கிறார்கள்.
அந்த வகையில் தனது சிரிப்பின் மூலம் ஒட்டுமொத்த ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்து புன்னகை அரசி என்ற பெயருடன் ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம்பிடித்தவர் நடிகை சினேகா. சோலோ ஹீரோயினாக நடித்து ஒட்டுமொத்த ரசிகர்களையும் தனக்கென உருவாக்கினார். தொடர்ந்து பல திரைப்படங்களில் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடிக்க வாய்ப்பு கிடைத்து வந்தது.
அந்த வகையில் தான் நடிகர் பிரசன்னாவுடன் இணைந்து நடித்துக் கொண்டிருக்கும் பொழுது இவர்களுக்கு இடையே காதல் மலர்ந்ததால் இருவரும் சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார்கள் அந்த வகையில் இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளது.
எனவே தொடர்ந்து சினேகா கர்ப்பமாக இருந்ததால் திரைப்படங்களில் நடிக்க முடியாமல் போனது அந்த வகையில் கடைசியாக இவர் தனுஷுடன் இணைந்து பட்டாசு திரைப்படத்தில் நடித்திருந்தார். திரைப்படத்தில் இவரின் கேரக்டரும் ரசிகர்கள் மத்தியில் பாராட்டப்பட்டது.
அதன் பிறகு தனது இன்ஸ்டாகிராமில் தனது குழந்தைகளின் புகைப்படத்தையும் தனது கவர்ச்சியால் புகைப்படங்களையும் வெளியிட்டு மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார். இந்நிலையில் நேற்று சகோதரர் தினம் என்பதால் தனது அண்ணனுடன் இருக்கும் புகைப்படத்தை முதன்முறையாக வெளியிட்டு உள்ளார். அதோடு இவரின் மகன் மகள் புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார்.