தமிழ் சின்னத்திரையில் முன்னணி நடிகைகளாக வலம் வந்து கொண்டிருக்கும் சுந்தரி-கண்ணம்மா நடித்திருக்கும் N4 படத்தின் ஸ்னீக் பீக் வீடியோ தற்பொழுது வெளியாகி சோசியல் மீடியாவில் ட்ரெண்டிங்காகி வருகிறது. சின்னத்திரையில் தற்பொழுது பயங்கர ஹிட்டாக ஒளிபரப்பாகி வரும் சீரியல்கள் தான் சுந்தரி மற்றும் பாரதி கண்ணம்மா. சன் டிவியில் சில வருடங்களாக வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் சீரியல்தான் சுந்தரி.
இந்த சீரியலில் கதாநாயகியாக கேப்ரில்லா நடித்த வருகிறார் இதனை அடுத்து விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் முக்கியமான சீரியல் தான் பாரதி கண்ணம்மா இந்த சீரியலின் இரண்டாவது பாகம் தற்போது ஒளிபரப்பாகி வரும் நிலையில் கதாநாயகியாக வினுஷா தேவி நடித்த வருகிறார். நடிகை கேப்ரில்லா தற்போது சன் டிவியில் நடித்து வந்தாலும் இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் தான் போட்டியாளராக பங்கு பெற்றார்.
அதன் பிறகு பல பல நிகழ்ச்சிகளில் பங்கேற்று வந்த இவர் கடந்த 2019ஆம் ஆண்டு லேடி சூப்பர் ஸ்டார் நடிப்பில் வெளிவந்த ஐரா படத்தில் சிறிய வயது கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். மேலும் இதனை தொடர்ந்து கேப்ரில்லா பல திரைப்படங்களில் துணை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்நிலையில் தற்பொழுது இவர் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சுந்தரி சீரியலில் நடித்துவரும் நிலையில் இந்த சீரியலின் மூலம் கேப்ரியல்லாவுக்கு தனி ஒரு ரசிகர் பட்டாளம் உருவாகியுள்ளது.
இவ்வாறு அதேபோல் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஹிட் சீரியலான பாரதி கண்ணம்மா சீரியலில் புது கண்ணம்மாவாக வினுஷா தேவி நடித்து வருகிறார். சமீப காலங்களாக இந்த சீரியலின் இரண்டாவது பகுதி ஒளிபரப்பாகி வரும் நிலையில் இதிலும் வினுஷா தேவி நடித்து வருகிறார். இவ்வாறு இருவரும் சின்னத்திரையில் முன்னணி நடிகைகளாக கலக்கி வருகின்றனர்.
இப்படிப்பட்ட நிலையில் இவர்கள் இருவரும் சேர்ந்து N4 என்ற படத்தில் நடித்திருக்கும் நிலையில் தற்பொழுது இந்த படத்தின் ஸ்னீக் பீக் வீடியோ வெளியாகி சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இந்த படத்தில் இவர்களுடன் இணைந்து மைக்கல், தர்மதுரை, அனுபமா குமார், அபிஷேக் சங்கர், வடிவுக்கரசி என பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வரும் நிலையில் இந்த படம் முழுக்க முழுக்க காசிமேடு பகுதியில் வாழ்ந்து வரும் மீனவர்களின் வாழ்க்கை கூறும் வகையில் எடுக்கப்பட்டு வருகிறது இந்த படத்தினை லோகேஷ் குமார் என்பவர் இயக்கி வருகிறார்.