சூர்யாவுக்கு ஏதாவது ஆச்சுன்னா சம்பந்தப்பட்டவருக்கு பாம்பு தான் பதில் சொல்லும்..! தில்லாக ரோட்டில் இறங்கிய பழங்குடிமக்கள்..!

jai-bheem-2
jai-bheem-2

சமீபத்தில் ஞானவேல் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான திரைப்படம் தான் ஜெய் பீம் இவ்வாறு வெளிவந்த இந்த திரைப்படம் மானது ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது மட்டுமில்லாமல் ஒரு சில தரப்பு மக்களிடம் மட்டும் எதிர்ப்பை  சம்பாதித்துள்ளது.

அந்தவகையில் இந்த திரைப்படத்தில் பிரபல சமூகத்தை இழிவு படுத்தி காட்டியதன் காரணமாக திரைப்படத்தின் மீது கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில் வன்னியர் சமுதாயம் இந்த திரைப்படத்திற்கும் சூர்யாவுக்கும் எதிராக குரல் கொடுக்கும் நிலையில் மக்கள் பலரும் சூர்யாவுக்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகிறார்கள்.

இந்நிலையில் மதுரை கலெக்டர் ஆபீஸ் முன்பு பழங்குடி நாடோடி கூட்டமைப்பில் சுமார் 50 பேர்க்கு மேற்பட்ட பழங்குடி மக்கள் ஜெய்பீம் படத்திற்கும் சூர்யாவிற்கும் ஆதரவாக போராட்டம் நடத்தி உள்ளார்கள்.

அது மட்டுமில்லாமல் நமது முதல்வர் தமிழகம் முழுவதும் உள்ள பழங்குடி மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை  மு க ஸ்டாலின் அவர்கள் வழங்கியிருக்கிறார் அந்த வகைகள் முதலமைச்சர் ஸ்டாலினுக்கும் சூர்யா மற்றும் நீதியரசர் சந்துரு ஆகிய அனைவருக்கும் தங்களுடைய வாழ்த்து மற்றும் நன்றியை தெரிவித்துள்ளார்.

jai-bheem-2
jai-bheem-2

அதுமட்டுமில்லாமல் இந்த ஆர்ப்பாட்டத்தின் போது பல்வேறு மக்களும் கையில் சார பாம்பு நல்ல பாம்பு எலிகள் பூம்பூம்மாடு என அனைத்தையும் கையில் வைத்துக்கொண்டு ஆர்ப்பாட்டம் பண்ணியது மட்டுமில்லாமல் சூர்யாவுக்கு எதிராக பல்வேறு அமைப்புகள் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகிறது அந்த வகையில் சூர்யாவுக்கு எதிராக எந்த அசம்பாவிதமும் நடந்தாலும் அவர்கள்மீது பாம்பை கொண்டு எறிவோம் என பழங்குடி மற்றும் நாடோடி மக்கள் கூறியுள்ளார்கள்