தமிழ் சினிமாவில் பல இளம் நடிகைகள் நடிக்க ஆரம்பித்து விட்டார்கள் அந்த வகையில் இளம் நடிகைகளுக்கு தமிழ் சினிமாவில் அதிக வாய்ப்புகள் கிடைத்து வருகிறது. அதுமட்டுமில்லாமல் சமூக வலைதளத்தை பயன்படுத்தி இளம் நடிகைகள் மிகவும் பிரபலம் அடைந்து சினிமாவில் வாய்ப்பு பெற்று வருகிறார்கள். அதேபோல் தமிழ் சினிமாவில் முன்பு அதிகமாக பக்தி திரைப்படங்கள் வெளியாகியது.
ஆனால் சமீப காலமாக பெரிதளவு பக்தி படங்களை யாரும் விரும்புவதில்லை இயக்குவதும் கிடையாது. பக்தி படத்தில் நடிப்பதும் மிகவும் குறைவு தான் காரணம் இந்த கதை மக்களிடையே நல்ல வரவேற்பு பெறுமா இல்லை எதிர்பார்த்த அளவு வரவேற்பை பெறாதா என்ற தயக்கம் இயக்குனர்களிடையே இருந்து வருகிறது அதனால் இயக்குனர்களும் பக்தி படங்களை இயக்குவதற்கு தயக்கம் காட்டி வருகிறார்கள்.
அந்த வகையில் கடந்த வருடம் வெளியாகி ரசிகர்கள் இடையே நல்ல வரவேற்பு பெற்ற திரைப்படம் தான் மூக்குத்தி அம்மன், இந்த படத்தில் அம்மன் வேடத்தில் லேடிஸ் சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்து கலக்கி இருப்பார் அவர் நடித்தது சர்ச்சையை சந்தித்தாலும் அவரின் நடிப்பு மிகவும் பிரபலமாக பேசப்பட்டது. அதேபோல் அம்மன் கதாபாத்திரத்தில் நயன்தாராவை தவிர வேறு யாரும் அவ்வளவு கச்சிதமாக நடித்திருக்க முடியாது என பலரும் கூறினார்கள்.
இந்த திரைப்படத்தில் ஆர் ஜே பாலாஜி ஒரு சாமானிய மக்களாக நடித்திருப்பார் எல் கே ஜி திரைப்படத்தில் அரசியல்வாதிகளின் ஊழலை தோலுரித்துக் காட்டினார் இந்த திரைப்படத்தில் எளிய வழியில் கிடைக்கும் ஆசைகள் எதுவும் நிரந்தரம் கிடையாது எனவும் உழைத்து உயரத்திற்கு சென்றால்தான் நிரந்தரம் என்றும் மிகவும் எளிமையாக கதையம்சம் கொண்ட திரைப்படமாக மூக்குத்தி அம்மன் அமைந்தது.
இந்த திரைப்படத்தில் ஆர்.ஜே பாலாஜி அவர்களுக்கு மூன்று சகோதரிகள் இருப்பார்கள் அதில் ஒருவர் தான் ஸ்மிருத்தி வெங்கட் தற்பொழுது இவர் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது அது மட்டும் இல்லாமல் இந்த மூக்குத்தி அம்மன் திரைப்படத்தில் ஆர் ஜே பாலாஜிக்கு தங்கையாக நடித்தவரா என அனைவரும் ஆச்சரியப்பட்டு வருகிறார்கள்.