பல வருடம் கழித்து மீண்டும் ரஜினியுடன் கைகோர்க்கும் ஸ்மார்ட் வில்லன்..! மகிழ்ச்சியில் ரசிகர்கள்.

rajini

தமிழ் சினிமா உலகில் 40 ஆண்டுகளுக்கு மேலாக நடித்து ஓடிக் கொண்டிருப்பவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இவர் இப்பொழுது வருடத்திற்கு ஒரு படத்தை  சிறப்பான முறையில் கொடுத்து வருகிறார் அந்த வகையில் அண்ணாத்த திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து தனது 169 திரைப்படமான ஜெயிலர் திரைப்படத்தில் விறுவிறுப்பாக நடித்து வருகிறார்.

இந்த படத்தின் ஷூட்டிங் சென்னையில் போய்க்கொண்டிருக்கிறது. கன்னட நடிகர் சிவ ராஜ்குமார், ரம்யா கிருஷ்ணன், தமன்னா, வசந்த் ரவி, விநாயகன் மற்றும் பல முன்னணி நடிகர், நடிகைகள் நடித்த வருகின்றனர் இந்த படம் முழுக்க முழுக்க ஜெயில் சம்பந்தப்பட்ட ஒரு படமாக உருவாகி வருவதாக கூறப்படுகிறது.

ஜெய்லர் படத்தில் ரஜினி வயதான கதாபாத்திரத்தில் நடித்து ஓடுவதாக ஒரு பக்கம் கிசுகிசுக்கப்படுகிறது இப்படி இருக்கின்ற நிலையில் இந்த படத்தை முடித்துவிட்டு தனது 170 வது திரைப்படத்தில் நடிக்கவும் ரஜினி ரெடியாக இருக்கிறார். அந்தப் படத்தை சிபிச் சக்கரவர்த்தி இயக்க உள்ளார் என கூறப்படுகிறது. இப்படி இருக்கின்ற நிலையில் அந்த படத்தை மிகப் பிரமாண்ட பொருள் செலவில்லை லைகா  நிறுவனம் தயாரிக்க இருப்பதாக சொல்லப்படுகிறது.

அது மட்டுமல்லாமல் அந்த படத்தில் ரஜினிக்கு வில்லனாக ஆணழகன் நடிகர் அரவிந்த்சாமி நடிக்க இருப்பதாக சொல்லப்படுகிறது அண்மைக்காலமாக அரவிந்த்சாமி ஹீரோ, வில்லன் போன்ற கதாபாத்திரங்களில் அதிகம் கவனம் செலுத்தி ஓடுகிறார் அந்த வகையில் 170 திரைப்படத்தில் ரஜினிக்கு வில்லனாக அரவிந்த்சாமி ஒப்பந்தமாக அதிக வாய்ப்புகள் இருப்பதாக சொல்லப்படுகிறது.

aravind samy
aravind samy

31  வருடங்கள் முன்பு ரஜினியும் அரவிந்த்சாமியும் தளபதி படத்தில் அண்ணன் தம்பியாக நடித்திருப்பனர்.  மீண்டும் தலைவர் 170 படத்தில்  ரஜினி அரவிந்த்சாமி   இணைய சொல்லப்படுகிறது அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெகு விரைவிலேயே வரும். அதுவும் ரஜினி 170 படம் குறித்து பொன்னியின் செல்வன் இசை வெளியீட்டு விழாவில் லைகா நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தாலும் அறிவிக்கலாம் என ஒரு பக்கம் கிசுகிசுக்கப்படுகிறது.