பிக்பாஸ் பிரபலத்தை திருமணம் செய்து கொண்ட சின்னத்திரை சீரியல் நடிகை.! வாழ்த்துக்கள் கூறும் ரசிகர்கள்..

bigg-boss
bigg-boss

சமீப காலங்களாக சின்னத்திரை பிரபலங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது ஏனென்றால் இவர்கள் வெள்ளித்திரை நடிகர் விட சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார்கள் எனவே இவர்களுக்கென தனி ஒரு ரசிகர் பட்டாளம் உருவாகி விடுகிறது. இப்படிப்பட்ட நிலையில் தற்பொழுது சின்னத்திரை பிரபலம் பிக்பாஸ் பிரபலத்தை திருமணம் செய்து கொண்ட நிலையில் அது குறித்த தகவல்கள் மற்றும் புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

அதாவது சின்னத்திரையில் பிரபல நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகை தேஜஸ்வினி. இவர் தமிழ், கனடா மற்றும் தெலுங்கு என பலமொழி சீரியல்களிலும் நடித்து பிரபலமடைந்தார். அந்த வகையில் தமிழ் சின்னத்திரையில் முக்கிய தொலைக்காட்சியாக இருந்து வரும் விஜய் டிவியின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அடைந்தார்.

அதாவது இவர் கடந்த 2020ஆம் ஆண்டு அறிமுகமான சீரியல் தான் சுந்தரி நீயும் சுந்தரன் நானும் இந்த சீரியலின் மூலம் தமிழ் சின்னத்திரைக்கு அறிமுகமானார் இந்த சீரியலில் இவருக்கு ஜோடியாக வினோத் பாபு நடித்திருந்த நிலையில் இவர்களுடைய கெமிஸ்ட்ரி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றது.

இப்படிப்பட்ட நிலையில் தேஜஸ்வினி கன்னட பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான அமர்த்தீப் சவுத்ரியை திருமணம் செய்துள்ளார் தற்பொழுது அவருடைய திருமண புகைப்படங்களை இணையதளத்தில் பதிவிட்டுள்ள நிலையில் அது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று வருகிறது.

THEJASHWINI
THEJASHWINI

இவர் மேலும் வித்யா நம்பர் 1 என்னும் சீரியலின் நடித்திருந்த நிலையில் இதனை வைத்து ரசிகர்கள் வித்யா நம்பர் 1 என்னும் சீரியலில் இருக்கும் ஜோடியாக வரும் சஞ்சய் போன்று திருமணத்தில் மாப்பிள்ளை தோழனாக வந்ததை பார்த்த இணையதள வாசிகள் கலாய்த்து வருகின்றனர்.