திரை உலகில் இருக்கும் நடிகர் நடிகைகள் எப்படி பல சொகுசு கார்களை வாங்கி ஆடம்பர வாழ்க்கையை வாழ்கின்றனரோ அதே போல சின்னத்திரை சீரியல் நடிகர் நடிகைகளும் சிலர் சினிமா நடிகர் நடிகைகளுக்கு டஃப் கொடுக்கும் வகையில் விலை உயர்ந்த சொகுசு கார்களை பயன்படுத்தி வருகின்றனர். அப்படி சின்னத்திரையில் இருக்கும் சில பிரபலங்கள் யார் யார் எந்தெந்த சொகுசு கார்களை பயன்படுத்தி வருகின்றனர் என்ற விபரத்தை பற்றி பார்க்க உள்ளோம்..
1.சரண்யா துரடி : இவர் சின்னத்திரையில் முன்னணி நடிகை ஆவார். விஜய் டிவியில் ஒளிபரப்பான நெஞ்சம் மறப்பதில்லை சீரியல் மூலம் பிரபலம் அடைந்த சரண்யாவிடம் மிக மிக விலை உயர்ந்த பிஎம்டபிள்யூ எக்ஸ் 5 சீரிஸ் கார் இருக்கிறது. அதோடு மட்டுமல்லாமல் சரண்யாவிடம் பிஎம்டபிள்யூ ஜி 310 ஜி எஸ் பிரீமியம் என்ற பைக்கையும் அவர் பயன்படுத்தி வருகிறார்.
இந்த பைக்கின் விலை 3.20 லட்சத்திற்கு மேல் ஆகும். இதேபோல் அவர் பயன்படுத்தி வரும் சொகுசு காரின் விலையும் 78 லட்சத்திற்கு அதிகமாகும் என கூறப்படுகிறது. 2. ஷிவானி நாராயணன் : பகல் நிலவு, இரட்டை ரோஜா போன்ற சீரியலில் நடித்து பின் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகே அதிகம் பிரபலம் அடைந்தவர்.. இவரும் மிக மிக விலை உயர்ந்த சொகுசு கார்களையே பயன்படுத்தி வருகிறார்.
இவரிடம் பி எம் டபிள்யூ 7 சீரிஸ் இருக்கிறது இது அண்மையில் தான் வாங்கப்பட்டது இதன் விலை மட்டும் 1.2 கோடிக்கு மேல் இருக்கும் என சொல்லப்படுகிறது. 3. பாலாஜி முருகதாஸ் : பிக் பாஸ் 4 நிகழ்ச்சி மூலம் அறிமுகமான பாலாஜி மிருகதாஸ் சென்ற வருடம் தான் பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் செடான் ரக சொகுசு காரை வாங்கியுள்ளார். இதுபோக அவரிடம் பல ஆடம்பர பைக்குகளும் இருப்பதாக கூறப்படுகின்றன.
4. அருண்குமார் ராஜா : கல்யாணப்பரிசு, இளவரசி, வாணி ராணி, அழகி போன்ற பல சீரியல்களில் நடித்த அருண்குமாரி lடம் அதிக எண்ணிக்கையிலான விலையுயர்ந்த சொகுசு கார்கள் இருக்கின்றன. மேலும் இவர் சமீபத்தில் தான் மகேந்திரா தார் காரை வாங்கியுள்ளதாக கூறப்படுகின்றன. அதனுடன் சேர்த்து இவருக்கு தற்போது ஐந்துக்கும் அதிகமான கார்கள் இருப்பதாக கூறப்படுகிறது.
5. விஜே மணிமேகலை : vj வாக தனது பயணத்தை ஆரம்பித்து பின் குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் பிரபலம் அடைந்த மணிமேகலை பிஎம்டபிள்யூ எக்ஸ் ஒன் சொகுசு காரை பயன்படுத்தி வருகிறார் இதன் விலை 55.36 லட்சத்திற்கு மேல் ஆகும். 6. ஆலியா மானசா : ராஜா ராணி சீரியல் புகழ் ஆலியா மானசா மற்றும் சஞ்சீவ் ஜோடி இணைந்து மெர்சிடிஸ் பென்ஸ் சி கிளாஸ் சொகுசு காரை பயன்படுத்தி வருகின்றனர்.