சின்னத்திரை சீரியல் நடிகைகள் சீரியல்களின் நடிப்பது மட்டுமல்லாமல் பல தொழில்களையும் செய்து தொழிலதிபர்களாக திகழ்ந்து வருகிறார்கள் அது குறித்த பட்டியல் வெளியாகி உள்ளது. மக்களுக்கு பொழுது போக்கும் அம்சமாக சின்னத்திரை சீரியல்கள் விளங்கி வருவதனால் அனைத்து சீரியல்களுக்கும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது எனவே அந்த சீரியல் நடிக்கும் பிரபலங்களும் எளிதில் பிரபலமடைந்து விடுவார்கள். அந்த வகையில் பல சீரியல் நடிகைகள் தொழிலதிபர்களாக இருந்து வரும் நிலையில் அந்த நடிகைகள் குறித்து பார்க்கலாம்.
மகேஸ்வரி: தொகுப்பாளராக மக்கள் மத்தியில் பிரபலமான இவர் சின்னத்திரை சீரியல்களில் நடிக்க ஆரம்பித்தார் இருந்தாலும் சொல்லும் அளவிற்கு இவருடைய புகழ் பிரபலம் அடையாமல் இருந்து வந்த நிலையில் பிறகு பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பட்டிக்தொட்டி எங்கும் பிரபலமானார். இந்நிலையில் தற்பொழுது நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கி வருகிறார். அதோட மட்டுமல்லாமல் திரைப்படங்களிலும் நடித்து வரும் நிலையில் இவர் ஒரு தொழிலதிபராவார். அதாவது சொந்தமாக உணவகம், பொட்டி போன்ற தொழில்களை செய்து வருகிறார்.
ஸ்ரீதேவி அசோக்: சின்னத்திரை சீரியல்களின் மூலம் ஹீரோயினாகவும் வில்லியாகவும் பிரபலமான ஸ்ரீதேவி அசோக் சன் டிவி, விஜய் டிவி என பிறமொழி சேனல்களில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களிலும் நடித்து வருகிறார். இந்நிலையில் தற்பொழுது இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் காட்சிகென்ன வேலி, பொன்னி ஆகிய தொடர்களில் நடித்து வருகிறார். இவர் சொந்தமாக சிறிய பேன்சி ஜுவல்லரி ஷாப் ஒன்றை வைத்து இருக்கிறார்.
சைத்ரா ரெட்டி: சின்னத்திரை சீரியல்களின் மூலம் பிரபலமான இவர் ஜீ தமிழில் ஒளிபரப்பான யாரடி நீ மோகினி சீரியல் மூலம் வில்லியாக மக்கள் மத்தியில் பிரபலமான இவர் தற்பொழுது சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் கயல் சீரியலில் நடித்து வருகிறார். இந்த சீரியலுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வரும் நிலையில் டிஆர்பி யில் முதலிடத்தை பிடித்து வருகிறது. இவர் பியூட்டி பார்லர் ஒன்றை நடத்தி வருகிறார். மேலும் சென்னையில் பல இடங்களில் இவருடைய பியூட்டி பார்லர் உள்ளது.
ஸ்ருதிஹா: சில திரைப்படங்களில் நடித்த பிரபலமான சுருதிஹா திருமணத்திற்கு பிறகு சினிமாவில் இருந்து விலக பிறகு விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார். மேலும் சோசியல் மீடியாவிலும் மிகவும் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அழகு சாதனத் துறையில் அதிகாரம் கொண்டவர் எனவே இவர் இரண்டு காஸ்மெட்டிக்ஸ் பிராண்டுகளை வைத்துள்ளார்.